பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக ஆறு மாதத்திற்கு முன்பே தயாராகிவிட்டது :தூத்துக்குடியில் அமைச்சர் கடம்பூர் ராஜு பேட்டி..

பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள அதிமுக ஆறு மாதத்திற்கு முன்பே தயாராகிவிட்டது என தூத்துக்குடியில் நடைபெற்ற கடல் சாகச விளையாட்டுப் போட்டிகள் துவக்க விழாவில் அமைச்சர் அமைச்சர் கடம்பூர் ராஜு கூறினார்.

தூத்துக்குடி மாநகர மக்களின் பொழுதுபோக்கு அம்சங்களை மேம்படுத்தும் வகையில் தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் முத்து நகர் கடற்கரை பூங்காவில் தண்ணீர் சாகச விளையாட்டு மற்றும் மாநகராட்சி அலுவலகம் முன்பு LCD திரை ஆகியவற்றை அமைச்சர் கடம்பூர் ராஜு துவக்கி வைத்தார் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,”தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.1.20 கோடி மதிப்பீட்டில் 20 இ – டாய்லெட் எனும் கழிப்பறை வசதி செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படுகிறது. முத்துநகர் கடற்கரை பூங்காவில் முதற்கட்டமாக 4 இ – டாய்லெட் கழிப்பறைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. இ டாய்லெட் கழிப்பறையானது முழுவதும் தானியங்கி முறையில் செயல்படுவதற்கு தயார் செய்யப்பட்டுள்ளது. பொது மக்கள் ஒரு நபர் கழிப்பறையினை பயன்படுத்தி பிறகு மேற்படி இ டாய்லெட்டில் தானியங்கி முறையில் 4 முறை முதல் 7 முறை வரை தானாகவே சுத்தம் செய்து கொள்ளும் முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இ டாய்லெட் கழிப்பறைகளை பயன்படுத்தி சுகாதாரத்தை பேணி காக்க வேண்டும்.

தூத்துக்குடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிய நவீனமயமாக்க கூடிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு விரைவில் அடிக்கல் நாட்டப்பட இருக்கின்றது ,அதில் புதிய வணிக வளாகம் பல கோடி மதிப்பீட்டில் கீழ் கட்டப்படவுள்ளது அதற்க்கான ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டுள்ளன, அது இறுதி செய்யப்பட்ட பின்பு அதற்கான பணிகள் தொடங்கும் ,சமீபத்தில் மாவட்ட நிர்வாகத்தின் மூலமாகவும் மாநகராட்சி மூலமாகவும் தொடங்கிய Kayak படகு போக்குவரத்து பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது ,தொலைக்காட்சி மற்றும் ஊடகங்களில் நாம் மேலை நாடுகளில் பார்த்த கடல் சாகச விளையாட்டுக்கள் இன்றைக்கு தனியார் பங்களிப்புடன் இங்கு தொடங்கப்பட்டுள்ளது,ராமநாதபுரம், ராமேஸ்வரத்தில் தொடங்கப்பட்ட இந்த விளையாட்டுக்கள் தமிழகத்திலேயே இரண்டாவது இடமாக பரீட்சார்த்த முறையில் இங்கு தொடங்கப்பட்டுள்ளது ,இதற்கு முழு முயற்சி எடுத்த மாவட்ட நிர்வாகத்திற்கும் மாநகராட்சி நிர்வாகத்திற்க்கும் இந்த நேரத்திலே நான் நெஞ்சார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்கும் விதமாக பாதுகாப்பு விதிகளின் அடிப்படையில் இந்த விளையாட்டுக்கள், இந்த தனியார் நிறுவனத்தால் நடத்தப்படுகின்றன, அனைத்து பாதுகாப்பு அம்சங்களையும் கருத்தில் கொண்டு இவ்விளையாட்டுக்கள் சிறப்புடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறன, அண்டை மாவட்ட சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் இந்த விளையாட்டுக்கள் நேர்த்தியுடன் அமைக்கப்பட்டிருக்கின்றன, சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக தூத்துக்குடி விரைவில் வளர்ச்சிபெறும் ,விரைவில் தூத்துக்குடி அருகிலுள்ள தீவுகளுக்கு பயணிகள் படகு சவாரி சுற்றுலா செல்ல அரசுடன் கலந்தாலோசித்து ஏற்பாடு செய்யப்படும், சுற்றுலாத்துறை மற்றும் மீன்வளத்துறை ஆகிவற்றோடு ஒருங்கிணைத்து இந்த பணிகள் மேற்கொள்ளப்படும், எத்தனை தீவுகளுக்கு படகுசவாரி அனுப்ப முடியும் என்பதை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள் அதில் வாய்ப்புள்ள இடங்களில் படகு போக்குவரத்து தொடங்க ஏற்பாடு செய்யப்படும்

கடற்கரையில் தொடங்கப்பட்டுள்ள விளையாட்டுக்களுக்கு பொது மக்களிடம் கருத்து கேட்டு தனியார் நிறுவனத்துடன் கலந்து பேசி கட்டணம் நிர்ணயிக்கப்படும். இந்த விளையாட்டுக்களுக்கு இதுவரை கட்டணம் நிர்ணயிக்கப் படவில்லை பொது மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்த கட்டணத்தில் சேவைகள் வழங்கப்படும். CSR fund மூலம் NTPL என்ற நிறுவன தனியார் பங்களிப்புடன் எல்இடி திரைகள் நகரில் வைக்கப்பட்டுள்ளன,தற்போது ஒரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள LCD திரை விரைவில் மக்களின் வரவேற்பை பொறுத்து பல்வேறு இடங்களில் நிறுவப்படும்.

மாவட்டத்தை சுற்றுலா தளமாக்க படிப்படியான முன்னோட்டமாக இத்திட்டங்கள் தொடங்கப்படுகின்றன. விமான நிலைய விரிவாக்கத்துக்காக மாவட்ட நிர்வாகம் மூலம் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.  தூத்துக்குடி விமான நிலையம் கூடிய விரைவில், 2019 க்குள் பன்னாட்டு விமான நிலையமாக வளர்ச்சி பெறும்,அவ்வாறு வளர்ச்சி பெறுகின்ற நேரத்திலே, அதற்க்கு முன்பாகவே வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சுற்றுலாத்தலங்களை கண்டறிந்து, தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் அதிக சுற்றுலா தலங்களை உடைய மாவட்டமாக வளர்ச்சி பெறும், விரைவில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளை ஒருங்கினைத்து தமிழ்நாட்டிலேயே அதிக சுற்றுலா தலங்களை கொண்ட மாவட்டமாக தூத்துக்குடி மாவட்டம் வளர்ச்சி பெறும். சுற்றுலாத்துறை மூலமாக பல்வேறு திட்டங்கள் செயல் படுத்திய பிறகு தூத்துக்குடி மாவட்ட கடற்கரையோரங்களில் ஹோட்டல்கள் ரிசார்ட்டுகள் கட்டும் திட்டம் குறித்து பரிசீலிக்கப்படும்.

திமுகவின் கிராமசபை கூட்டங்கள் பற்றிய கேள்விக்கு பதிலளிக்கையில், தேர்தலை எதிர்கொள்வதற்கு ஒவ்வொரு கட்சிகளும் ஒவ்வொரு நிலைப்பாட்டை எடுத்துக் கொள்கின்றனர். திமுகவினர் இன்றைக்குத்தான் கிராமசபைக் கூட்டங்களை ஏற்பாடு செய்து தேர்தல் பணி செய்து கொண்டிருக்கிறார்கள் ,நாங்கள் அப்படி அல்ல, நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது என்ற நிலையில் தமிழகத்தில் மட்டும் இல்லை இந்தியாவிலேயே முதன்முதலாக தேர்தல் பிரச்சார பயணத்தை முதலில் துவங்கியது அதிமுக தான் ,நாடாளுமன்றத் தேர்தல் வரும் என்ற நிலையிலே பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை கொண்ட சைக்கிள் பேரணியை மதுரையில் தொடங்கியிருக்கிறோம், பத்து, பதினைந்து மாவட்டங்களில் சைக்கிள் பிரச்சாரம் பேரணியை முன்பே துவக்கி வைத்து இருக்கிறோம்.

அது மட்டுமல்லாமல் அனைத்து ஒன்றியங்களிலும் அவர்களது கிராமசபை கூட்டங்கள் என்று இன்று சொல்கிறார்களே , இந்த பணியை நாங்கள் 6 மாதமாக ஒவ்வொரு ஊராட்சிக்கும் சென்று அதில் ஒவ்வொரு ஊராட்சி கழக மட்டத்தில் வாக்குச்சாவடி முகவர் நியமிக்கும் பணிகளை ஆறு மாத காலத்திற்கு முன்பே நிறைவு செய்திருக்கின்றோம், நமது மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் தேர்தல் பணிகளை நிறைவு செய்து தேர்தலை எதிர்கொள்ள தயாராக இருக்கின்ற ஒரே கட்சி அதிமுக தான், தூத்துக்குடி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் வாக்குச்சாவடி முகவர்கள் ஒரு தொகுதிக்கு 12,000 முதல் 15,000 வாக்குச்சாவடி முகவர்கள் நியமித்திருக்கிறோம், தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் உள்ள 14 லட்சம் வாக்காளர்களுக்கு ஒரு லட்சம் வாக்குச்சாவடி முகவர்களை நியமித்து திருக்கிறோம் ஒரு லட்சம் வாக்குச்சாவடி முகவர்கள் மூலமாக அதிகமான வாக்குகளை பெற்று தூத்துக்குடி பாராளுமன்றத் தொகுதியை அனைத்திந்திய அண்ணா திமுக கைப்பற்றும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்,என கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் அமைசர் செல்லப்பாண்டியன், நெல்லை ஆவின் சேர்மன் சின்னதுரை, பி.டி.ஆர். ராஜகோபால் ,மற்றும் கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..