தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டார்..

தூத்துக்குடி மாவட்ட இறுதி வாக்காளர் பட்டியலை ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட அஇஅதிமுக மாவட்ட செயலாளர் சி த செல்லப்பாண்டியன் பெற்றுக்கொண்டார். தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, இறுதி வாக்காளர் பட்டியலை அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் இன்று வெளியிட்டார்.

இதில் தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்தம்ஆறு தொகுதிகளில் மொத்த வாக்காளர்கள் 14,02,300 லட்சம், ஆண் வாக்காளர்கள் 6,90,106 லட்சம், பெண் வாக்காளர்கள் 7,12,098 லட்சம், இதர வாக்காளர்கள் 96 என மொத்தம் 14,02,300 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவித்தார்,

மேலும் இறுதி வாக்காளர் பட்டியலில் 18 முதல் 19 வயதுடைய இளம் வாக்காளர்கள் எண்ணிக்கை 14 ஆயிரத்து 608 பேர் ஆகும், தூத்துக்குடி மாவட்டத்தில் மொத்த வாக்குச்சாவடிகளின் எண்ணிக்கை 1593 ஆக உள்ளது. புதிதாக சேர்க்கப்பட்ட வாக்காளர்களுக்கு Epic அட்டைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் மாவட்ட ஆட்சியர் தகவல் தெரிவித்தார்

நிகழ்ச்சியில் அஇஅதிமுக அமைப்பு செயலாளர் என் சின்னத்துரை , மேற்கு பகுதி செயலாளர் ஏ. முருகன் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தி:/ அஹமது, தூத்துக்குடி

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image