Home செய்திகள் தமிழ் கையெழுத்தில் கின்னஸ் சாதனை – வென்று காட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை..

தமிழ் கையெழுத்தில் கின்னஸ் சாதனை – வென்று காட்டிய சகாயம் ஐ.ஏ.எஸ். மக்கள் பாதை..

by ஆசிரியர்

சகாயம் ஐ.ஏ.எஸ். வழிகாட்டுதலில் இயங்கும் மக்கள் பாதை அமைப்பு தமிழ் கையெழுத்தில் கின்னஸ் சாதனை படைத்துள்ளது. தன்னை அரசியலுக்கு அழைத்த இளைஞர்களை ஒருங்கிணைத்து, சமூகத்தில் ஒரு அங்கமே அரசியல், சமூகம் மாறினால் அரசியல் மாற்றம் தானாக நிகழும் என்று கூறி மக்கள் பாதை என்னும் அமைப்பை துவக்கி சமூக மாற்றத்திற்காக சகாயம் செய்துக்கொண்டிருக்கிறார் ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.

மக்கள் பாதை அமைப்பு சமூக மாற்றத்திற்காகவும், எளியோரின் வாழ்வை மேம்படுத்தவும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் தனக்கு ஐ.ஏ.எஸ். பதவியா அல்லது தமிழா என்றால் தமிழ்தான் முக்கியம் என்று கூறிய சகாயம் ஐ.ஏ.எஸ். அவர்கள், ஆங்கில மோகத்தால் மெல்ல சாகும் தமிழின் அழிவை கண்டு வருந்தினார். தமிழை மீட்டெடுக்கும் முயற்சியாக மக்கள் பாதை திட்டங்களில் ஒன்றான “தமிழுக்கும் அமுதென்று பேர்” என்ற திட்டத்தின் கீழ் தமிழ் கையெழுத்து இயக்கத்தை நடத்த உத்தேசித்தார். இதற்கு முக்கிய காரணம் தன் பெயரை தமிழில் கையெழுத்திடுவதை கூட அவமானமாக கருதும் தலைமுறைக்கு, தமிழில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல தன்மானம் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவே. உலகின் மூத்த குடிமக்கள் தமிழ் மக்கள், உலகின் மூத்த மொழி மட்டுமல்லாமல் முதன்மை மொழியாம் தமிழ் மொழியின் பெருமையை இன்றைய தலைமுறைக்கு எடுத்து செல்லும் விதமாக தமிழ் கையெழுத்து திருவிழாவை நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக தமிழகம் மட்டுமின்றி உலக நாடுகளிலெல்லாம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

அதன்படி கடந்த அக்டோபர் மாதம் 2 ஆம் தேதி சென்னை அமைந்தகரையில் உள்ள எஸ்.ஐ.ஜி.ஏ. தொழில்நுட்ப கல்லூரியில் தமிழ் கையெழுத்து திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவில் தமிழ் சான்றோர்களின் வழித்தோன்றல்கள், தமிழ் பற்றாளர்கள், பொதுமக்கள் என 8 ஆயிரத்திற்கும் மேலானோர் கலந்துக்கொண்டனர். மக்கள் பாதை தலைவர் நாகல்சாமி ஐ.ஏ.ஏ.எஸ். தலைமையில், மக்கள் பாதை வழிகாட்டி சகாயம் ஐ.ஏ.எஸ். முன்னிலையில் இந்நிகழ்வு நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் தமிழகத்தின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட விருந்தினர்கள் உட்பட அனைவரும் தமிழில் கையெழுத்திட்டது மட்டுமல்லாமல் இனி தமிழில் மட்டுமே கையெழுத்திடுவோம் என்று உறுதி மொழி ஏற்றனர்.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக தமிழ் கையெழுத்து கின்னஸ் சாதனை முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. இதில் இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் என 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் கலந்துக்கொண்டு தமிழில் கையெழுத்திட்டனர். இந்நிலையில் கின்னஸ் நிறுவனத்தினர் விதிமுறைகளின்படி ஆய்வு செய்து, மக்கள் பாதையின் அதிகமானோர் தமிழில் கையெழுத்திட்ட நிகழ்வை கின்னஸ் சாதனையாக அங்கீகரித்துள்ளனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!