இராமேஸ்வரம் சங்குமால் கடலில் விடப்பட்ட 9 லட்சம் இறால் மீன் குஞ்சுகள் …

இந்திய கடல் எல்லையில் ராமேஸ்வரம், பாம்பன் மீனவர்கள் பாரம்பரியமாக மீன்பிடித்து வருகின்றனர். இலங்கை கடற்படை கெடுபிடியால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் தற்போது சிரமமடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் இறால் மீன்கள் (பிளவர் இறால்) உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்தில் (Central Marine Fisheries Research Institute, Mandapam Regional Centre) பல லட்சம் பிளவர் இறால் மீன் குஞ்சுகள் உற்பத்தி செய்யும் பணி நடந்து வந்தன. உற்பத்தியான இறால் மீன் குஞ்சுகளை சங்குமால் கடல் பகுதியில் விடும் நிகழ்ச்சி மத்திய கடல்வள மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானி முனைவர் ஜெயக்குமார் தலைமையில் நேற்று நடந்தது. இறால் மீன் குஞ்சுகளை, மீன் ஆராய்ச்சி நிலைய விஞ்ஞானிகள் மீனவர்கள் இணைந்து நாட்டுப் படகுகளில் எடுத்துச் சென்று கடலில் விட்டனர்.

இது குறித்து விஞ்ஞானி ஜெயக்குமார் கூறும்போது: கடந்த 5 ஆண்டுளில் 65 லட்சம் இறால் மீன் குஞ்சுகளை கடலில் விட்டுள்ளோம். இதன் தொடர்ச்சியாக, 9 லட்சம் இறால் குஞ்சுகளை மன்னார் வளைகுடா கடலில் நேற்று விடப்பட்டன. மண்டபத்தில் உள்ள மத்திய கடல் மீன் ஆராய்ச்சி மையத்தில் உற்பத்தி செய்த இறால் மீன் குஞ்சுகளை, வாழ்வதற்கு ஏற்ற கடல் பகுதிகளை கண்டறிந்து அப்பகுதிகளில் விடுவித்து வருகிறோம் என்றார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..