கொலை நடந்த 4 மணி நேரத்தில் 3 கொலையாளிகளை கைது செய்த தூத்துக்குடி போலீஸ் : S.P.முரளி ரம்பா பாராட்டு..

தூத்துக்குடியில் நடந்த கொடூர கொலையில் கொலையாளிகளை நான்கு மணி நேரத்தில் கைது செய்த தூத்துக்குடி தாளமுத்து நகர் போலீசாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வெகுவாக பாராட்டினார்.

தூத்துக்குடி விவேகானந்தர் நகரைச் சேர்ந்த பெரியசாமி என்பவருடைய மகன் பாலமுருகன்,என்ற பட்டாசு பாலு, கட்டிட தொழிலாளியான இவருக்கு கடந்த ஆண்டு இந்திரா என்பவருடன் திருமணமாகியுள்ளது, இந்நிலையில் நேற்று மாலை தனது நண்பர் கார்த்திக் என்பவருடன்தூத்துக்குடி பொன் சுப்பையாநகரில் நின்று பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அந்த ஒரே பைக்கில் வந்த 3 வாலிபர்கள் அவரை சரமாரியாக தாக்கினர்,இதில் அவர் நிலைகுலைந்து கீழே விழுந்தார் ,அவர் சுதாரித்து எழுவதற்குள் அருகில் கிடந்த பாறாங்கல்லை தூக்கி அவருடைய தலையில் போட்டனர் பாலமுருகன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்,அவருடைய நண்பரான கார்த்திக் அவர்களிடம் இருந்து தப்பி ஓடினார்.

பின்னர் கொலையாளிகள் மூவரும் ம் அங்கிருந்து தப்பி சென்றனர், தகவல் அறிந்து வந்த தாளமுத்து நகர் இன்ஸ்பெக்டர் தங்க கிருஷ்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் ,பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரனையை தொடங்கினர் ,இதுகுறித்து போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தூத்துக்குடியை சேர்ந்த பிரபல ரவுடி பட்டுராஜ் (45) என்பவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ராமநாதபுரம் மாவட்டம் கன்னிராஜபுரத்தில் கொலை செய்யப்பட்டார்.இதுகுறித்து சாயல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் ,தற்போது கொலை செய்யப்பட்ட பாலமுருகன் 3-வது எதிரியாக சேர்க்கப்பட்டுள்ளார் என்பது தெரிய வந்தது.

இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டிருந்த வழக்கு கோர்ட்டில் நடந்து வரும் நிலையில் அதற்க்கு பழிவாங்கும் வகையில் பாலமுருகனை கொலை செய்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துதைத்தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் தங்கப்பாண்டியன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது ,தனிப்படையில் சப் இன்ஸ்பெக்டர்கள் சங்கர்,ஜீவமணி தர்மராஜ் ,ராஜா மணி ,மற்றும் CID ஏட்டு செல்லப்பா ஆகியோர் இடம் பெற்றிருந்தனர் , கொலை நடந்த சில மணி நேரங்களில் களத்தில் இறங்கிய தனிப்படையினர் கொலை செய்யப்பட்டவரின் நண்பரும் , கொலை சம்பவத்தை நேரில் பார்த்த கார்த்திக்கிடம் விசாரணையை தொடங்கினர் ,மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவு பெற்று அதன் அடிப்படையிலும் தனிப்படையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலையில் ஈடுபட்டதாக தூத்துக்குடி கிருஷ்ணராஜபுரத்தை சேர்ந்த மணி, தாளமுத்துநகர் நேரு காலனியை சேர்ந்த ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்த ஜெயராமபாண்டியன் என்ற மோகன் ராஜ் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் பட்டுராஜ் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலையை செய்ததாக அவர்கள் ஒப்பக் கொண்டனர் ,கொலை நடந்த நான்கு மணி நேரத்தில் கொலையாளிகள் தப்புவதற்குள் விரைந்து செயல்பட்டு கொலையாளிகளை கைது செய்த சப் இன்ஸ்பெக்டர் சங்கர், சப் இன்ஸ்பெக்டர் ஜீவமணி தர்மராஜ் ,சப் இன்ஸ்பெக்டர் ராஜா மணி ,மற்றும் CID ஏட்டு செல்லப்பா ஆகியோரை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா வெகுவாக பாராட்டினார். போலிசாரின் இந்த அதிரடி நடவடிக்கை பொது மக்கள் மத்தியில் பரபரப்பாக பேசப்படுகிறது.

நிருபர் :அஹமத்
படங்கள் : சாதிக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image