இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட சொகுசு ரயில் யாழ்ப்பாணம் வருகை..

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட எஸ்.13 குளிரூட்டப்பட்ட அதிவேக சொகுசு ரயில் “உத்தரதேவி” பயணிகளுடன் யாழ்ப்பாணத்தை வந்தடைந்தது. கொழும்பிலிருந்து நேற்று (27/01/2019) காலை தனது பயணத்தை துவக்கிய உத்தரதேவி மதியம் 2.40 மணியளவில் யாழ்ப்பாணம் வந்தடைந்தது.

இப்பயணத்தில் இலங்கை போக்குவரத்து அமைச்சர் அர்ஜூன ரணதுங்க, அமைச்சரின் செயலாளர், உதவி செயலாளர், ரயில் நிலைய அதிகாரிகள் உள பட பலர் பயணித்தனர்.

இதேவேளை, தமிழரசு கட்சி தலைவர் மவை சேனாதிராசா, யாழ்.மாநகர முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஆகியோர் யாழ்.பிரதான ரயில் நிலையத்தில் வரவேற்றனர். தேர்வு செய்யப்பட்ட பள்ளி மாணவ, மாணவர்களுக்கான கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியபாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..