இந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 110 கிலோ கஞ்சா பறிமுதல்: இலங்கையை சேர்ந்த மூவர் கைது..

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை கடற்கரையில் இந்தியாவில் இருந்து கடத்தி செல்லப்பட்ட 110 கிலோ கஞ்சா இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். கடத்தலில் ஈடுபட்ட மூன்று பேரை வல்;வெட்டித்துறை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்தியாவில் இருந்து வல்வெட்டித்துறை கடற்பரப்பிற்கு கஞ்சா கடத்தி வரப்படுவதாக கடற்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து,இந்திய இலங்கை சர்வதேச கடல் எல்லையில் இருந்து 2 கடல் மைல் தூரத்தில் இலங்கை கடற்படையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது நடுக்கடலில் சந்தேகத்திற்க்கு இடமாக நின்று கொண்டு இருந்த இலங்கை பைப்பர் படகு மற்றும் தமிழக நாட்டு படகை சுற்றி வளைத்தனர். அப் போது தமிழக படகு இலங்கை கடற்படை ரோந்து கப்பலை கண்டதும் இந்திய எல்லைக்குள் தப்பி சென்றனர்.

இதனையடுத்து இலங்கை பைபர் படகை பிடித்து சோதனை செய்தனர். அதில் 110 கிலோ கேரள கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்தனர் ,ஆனால் படகில் இருந்த இலங்கை நபர்கள் கடலில் குதித்து தப்பினர். இதனையடுத்து கடற்படையினர் வல்வெட்டித்துறை போலீசாருக்கு தகவல் கொடுத்ததையடுத்து கஞ்சா கடத்த முயன்ற மூன்று பேரை சந்தேகத்தின் பேரில் கடற்படையினரும் போலீசாரும் சேர்ந்து மடக்கி பிடித்தனர். ;. வல்வெட்டித்துறைக் கடற்கரையில் வைத்து நூறு கிலோ கஞ்சா கைப்பற்றினர். கஞ்சாவை கடத்தியதாக வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஒருவர், கஞ்சாவை வாங்கி செல்ல வந்த கொழும்புவைச் சேர்ந்த இருவரையும் கைது செய்தனர். கஞ்சாவுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 3 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வல்வெட்டித்துறைப் போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

நடுக்கடலில் தப்பி சென்ற இந்திய கடத்தல்காரர்கள் குறித்து இந்திய கடற்படை அதிகாரிகளிடம் தகவல் கொடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை வடக்கு கடற்பிராந்திய கடற்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..