எஸ்டிபிஐ கட்சி கிழக்கு மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்..

இராமநாதபுரம் எஸ்டிபிஐ கட்சி கிழக்கு மாவட்டம் சார்பில் அனைத்து செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திருவாடானை, இராமநாதபுரம் சட்ட மன்ற தொகுதி நிர்வாகிகள், நகர், கிளை நிர்வாகிகள், செயல்வீரர்கள், மகளிர்அணி(WIM) மாவட்ட நிர்வாகிகள், தொழிலாளர் அணி(SDTU) நிர்வாகிகள், செயல்வீரர்கள் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். மாவட்ட துணை தலைவர் சோமு தாங்கினார். மாவட்ட செயலாளர் அஸ்கர் வரவேற்றார்.

இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட துணை தலைவர் சுலைமான், மாவட்ட செயலாளரும், ஊடக ஒருங்கிணைப்பாளருமான ஹமீது இப்ராஹிம்,, மாவட்ட செயலாளரும், ஊடகத் தொடாபா ளருமான அப்பாஸ், மாவட்ட பொருளாளர் ரபீக், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி தலைவர் ஹஸனலி, திருவாடானை சட்டமன்ற தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆஷாத், தொழிலாளர் அணி (SDTU) மாவட்ட தலைவர் முஸ்தாக், மகளிர்அணி (WIM) மாநில துணைத்தலைவி உம்முல்தௌலத்தியா, மாவட்ட தலைவி சகிலா, பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா மாவட்ட செயலாளர் எம். நியாஸ்கான் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநில செயற்குழு உறுப்பினர் ரபீக்அஹமது, கிழக்கு மாவட்ட பொதுச்செயலாளர் செய்யது இப்ராஹிம், கிழக்கு மாவட்ட செயலாளர் பைரோஸ்கான், மேற்கு மாவட்ட செயலாளர் அஸ்கர்அலி பேசினர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹசனலி நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

August Issue…

August Issue…