பத்து நாட்களாக இயங்காத பேருந்தால் பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி..

திருநெல்வேலியில் இருந்து உடன்குடி வரை செல்லும் அரசுப் பேருந்து பத்து நாட்களாக இயங்காததால் பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது, இது குறித்து அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில், “திருநெல்வேலியில் இருந்து உடன்குடி வரை செல்லும் தடம் எண்(137 G)பேருந்து நாசரேத் வழியாக மெஞ்ஞானபுரம் செல்லமால் சோலைகுடியிருப்பு எள்ளுவிளை வீரப்பநாடார்குடியிருப்பு சீருடையார்புரம் வழியாக பரமன்குறிச்சி சென்று உடன்குடி செல்லும் , இந்த பேருந்து கடந்த 10 நாட்களாக வழிதடத்தில் இயங்கவில்லை இதனால் பள்ளி செல்லும் மாணவர்கள் பாதிப்பு அடைந்துள்ளார்கள்.

ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இயங்காமல் இருந்த இந்த பேருந்தை இயக்க பொதுமக்களிடம் மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் சார்பாக வீடு விடாக கையெழத்து இயக்கம் நடத்தி பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கபட்டது,

அவ்வாறு இயக்கப்பட்ட பேருந்தை எந்த வித முன்னறிவிப்பும் இல்லாமல் நிறுத்தியிருப்பது பொதுமக்களை பெரிதும் பாதித்துள்ளது,ஆகவே மாவட்ட நிர்வாகம் உடனே தலையிட்டு பேருந்தை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த இயக்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image