Home செய்திகள் ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை: பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் : தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துரி வேண்டுகோள்..

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை: பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் : தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துரி வேண்டுகோள்..

by ஆசிரியர்

ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை: பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் என தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்துரி வேண்டுகோள் விடுத்துள்ளார்

தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலகத்தில் கருவூலம் மற்றும் கணக்குத் துறையின் சார்பாக ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்தினை மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, இன்று (21.01.2019) குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்: தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்க வாய்ப்பே இல்லை , ஆலையை திறக்க கூடாது என்ற முடிவில் தான் தமிழக அரசும் உள்ளது ஆகவே பொது மக்கள் அமைதி காக்க வேண்டும் எந்தவிதப் போராட்டத்திலும் ஈடுபட வேண்டாம் தூத்துக்குடி திருநெல்வேலி நான்கு வழிச்சாலையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட பெண்ணுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய காவல்துறையால் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது குழந்தை கடத்தல் வழக்கில் கைதாகியுள்ள ஓட்டப்பிடாரம் தாசில்தார் தாமஸ் பயஸ் அருள் மீது தேவைப்பட்டால் துறைரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் கூறினார் மேலும் அவர் கூறுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் நிதித்துறை சார்பில் அரசு அலுவலகங்களில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை (Integrated Financial & Human Resources Management System) மென்பொருள் பயன்பாட்டு திட்டத்தினை துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் இத்திட்டத்தினை செயல்படுத்திட உத்தரவிட்டார். அதனடிப்படையில், தூத்துக்குடி மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் இன்று துவக்கி வைக்கப்பட்டது. இதன்மூலம் அரசு அலுவலர்களின் சம்பள பட்டியல் மற்றும் இதர பட்டியல்களை இணையதளம் மூலம் சமர்ப்பிக்கலாம்.

மேலும் இந்த பட்டியலின் நிலைப்பாடுகளை பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் எளிதில் தெரிந்துகொள்ளலாம். அரசுப்பணியாளர்கள் தங்களது பணி பதிவேடு, விடுப்பு விண்ணப்பங்கள், ஊதிய உயர்வு, கடன் முன்பணம் மற்றும் வருமான வரிசேமிப்பு விவரங்களை எளிதான முறையில் தெரிந்துகொள்ள முடியும். மேலும் இத்திட்டத்தின் மூலம் அரசு அலுவலர்கள் நேரடியாக கருவூல அலுவலகம் வருவதை தவிர்க்கப்படுவதோடு, கால விரையம் தவிர்க்கப்படும். நமது மாவட்டத்தில் உள்ள 35 அரசுத்துறைகளில் பணிபுரியும் 440 பணம் பெற்றும் வழங்கும் அலுவலர்கள் மற்றும் சுமார் 25,000 அரசுப் பணியாளர்களும் தங்கள் பதிவேட்டினை பார்வையிட்டு பயன் பெறும் வசதி இத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் துரிதமாக பட்டுவாடா செய்வதற்காகவும் அரசின் அனைத்து நலத்திட்டஉதவிகள் பயனாளிகளின் கணக்குகளில் உடனடியாக வரவு வைக்கும் வகையில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டத்தின் மூலம் 24 மணி நேரமும் இணையவழியாக அரசுக்கு பணம் செலுத்தலாம். வருமான வரித்துறையுடன் நேரடி ஒருங்கிணைப்பு மூலம் 24புஇ 24ஞஇ 26ஞ போன்றவற்றை தாக்கல் செய்யலாம். அரசு அலுவலர்கள் இத்திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டு பயன்பெற வேண்டும் என கூறினார் பின்னர் மாவட்ட ஆட்சியர் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கு ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டத்திற்கான பயனீட்டாளர் முகவரி மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை வழங்கினார். நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கருவூல அலுவலர் ப.பாமினிலதா, கூடுதல் கருவூல அலுவலர் நே.புஷ்ப சுதா ரெஜி, உதவிக் கருவூல அலுவலர் ஆ.விஜி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) கிறிஸ்டி, துறை அலுவலர்கள் மற்றும் கருவூல அலுவலக பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!