கிருஷ்ணகிரியில் கடன் தொல்லையால் மீனவர் உள்பட 2 பேர் தற்கொலை…

கிருஷ்ணகிரி சப்-ஜெயில் ரோட்டைச் சேர்ந்தவர் கணேஷ்குமார் (வயது36). கூலித்தொழிலாளி. இவருக்கு அளவுக்கு அதிகமாக வட்டிக்கு கடன் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதனால் கடனை திருப்பி அடைக்க முடியாமல் தவித்து வந்தார்.

இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி வீட்டில் தனியாக இருந்தபோது விஷம் குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதேபோன்று கிருஷ்ணகிரி தஞ்சாவூர் மாரியம்மன்கோவில் தெருவில் வசித்து வந்தவர் கார்த்திகேயன் (45). இவர் மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார். இவருக்கு கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணமாகி ராணி என்ற மனைவியும் ஒரு மகளும், மகனும் உள்ளனர்.

இந்த நிலையில் கார்த்திகேயன் வட்டிக்கு கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. பணத்தை கொடுத்தவர்கள் திருப்பி கேட்டதால் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்தார். கடன் தொல்லை காரணமாக கணவன்-மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த கார்த்திகேயன் நேற்று வீட்டில் தனியாக இருந்தபோது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவங்கள் குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..