Home செய்திகள் இராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..

இராமநாதபுரத்தில் 505 பேருக்கு ரூ.1.76 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள்..

by ஆசிரியர்

இராமநாதபுரத்தில் நடந்த விழாவில் 505 பயனாளிகளுக்கு ரூ.1.76 கோடி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமை வகித்தார். 505 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் மணிகண்டன் வழங்கினார். அவர் பேசியதாவது: உரிய வயது திருமணம், படித்த ஏழை பெண்களின் திருமணத்திற்கு நிதியுதவி மற்றும் தாலிக்கு 8 கிராம் தங்கம் வழங்கும் திட்டத்தில் ராமநாதபுரம், மண்டபம் l, திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியங்களைச் சார்ந்த 400 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.1.49 கோடியே 25 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) கீழ் உழைக்கும் மகளிருக்கு ரூ.25 ஆயிரம் அரசு மானியத்துடன் 105 பேருக்கு ரூ.26.25 லட்சம் மானியத்துடன் கூடிய அம்மா இரு சக்கர வாகனங்கள், 7 பயனாளிகளுக்கு விலையில்லா தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன.

இராமநாதபுரத்தில் கோடை கால குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய ரூ.7.50 மதிப்பில் 50 இடங்களில் புதிய தகவல் தொழில்நுட்பத்துறை மூலம்  நகராட்சி, ஊரகப் பகுதிகளில் குடிநீர் விநியோகம் உள்ளிட்ட வசதிகளை கண்காணிக்கும் முகமாக புதிய செயலி துவங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இச்செயலி வெற்றிகரமாக செயல்படுத்தினால் தமிழகம்  முழுவதும் இச்செயலி மூலம் கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பேசினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மாவட்ட ஊரக வளர்ச்சி  திட்ட இயக்குநர் கெட்சி லீமா அமலினி, மாவட்ட சமூக நல அலுவலர் குணசேகரி, ஊராட்சிகள் உதவி இயக்குநர் கேசவதாசன், உதவி மகளிர் திட்ட அலுவலர் ராஜா முகமது உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!