கீழக்கரையில் மீலாது விழா..

இராமநாதபுரம் மாவட்டம கீழக்கரை அனைத்து ஜமாத்தார்கள், சங்கங்கள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் யூனியன் சார்பில் 18/01/2019 அன்று ஹைரத்துல் ஜலாலியா பள்ளி வளாகத்தில்  மீலாது விழா நடைபெற்றது.

கீழக்கரை அனைத்து ஐமா அத் ஷரீ அத் வழிபாட்டு குழு தலைவர் ஏ.எம்.எம்.காதர் பக்ஸ் ஹுசைன் ஸீத்திக்கி தலைமை வகித்தார். கீழக்கரை அனைத்து ஜமாத்தார் முன்னிலை வகித்தனர். கீழக்கரை கிழக்கு தெரு குளங்கரை பள்ளி இமாம் எம்.ஷம்ஸத்தீன் உலவி கிரா அத் ஓதினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இளைஞரணி அமைப்பாளர் எஸ். முஹ்மது பஹ்ருல் பயாஸ் மொழியாக்கம் செய்தார். முகவை சீனி முகமது இஸ்லாம். மார்க்க பாடல் பாடினார். இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கீழக்கரை நகர் தலைவர் ஏ.கமருஸ் ஸமான் வரவேற்றார்.


தமிழக வக்பு வாரியத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான அ அன்வர் ராஜா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளரும், தமிழ்நாடு வக்பு வாரிய உறுப்பினரும், தமிழக சட்டசபை எதிர்கட்சி தலைவருமான கே.ஏ.எம். முகமது அபுபக்கர் எம்எல்ஏ, திண்டுக்கல் அல்பைய்யாஜுல் உலூம் பெண்கள் ரிஸ்வான் முதல்வர் ஏ.எஸ்.எம்.முஹமது ஹாரூன் தாவூதி ஆகியோர் பேசினர்.திருச்சி ஐமால் முகமது கல்லூரி அரபி பாடத் துறை பேராசிரியர் ஏ.எம்.கே.செய்யித் அஹ்மது நெய்னா ஜமாலி துவா செய்தார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கீழக்கரை நகர் செயலாளர் ஏ.எம் எஸ்.ஹபீப் முஹமது தம்பி நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…