மக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம்…

இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை சார்பாக திருவாடானை ஒன்றியம் கலியநகரி ஊராட்சி பரப்புவயல் கிராமத்தில் ஊருக்கு ஒரு தலைவனை தேடிய பயணம் 20-01-2019 இன்று மேற்கொள்ளப்பட்டது. திருவாடானை ஒன்றிய துணை ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சரவணன் அவர்கள் மக்கள் பாதையை பற்றியும் நமது வாக்கு விற்பனைக்கு அல்ல என்பதை பற்றியும் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார்.

மக்கள் பாதையின் திட்டங்கள் மற்றும் தமிழில் கையெழுத்திடுவதின் அவசியத்தை பற்றி இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் எடுத்துரைத்தார். கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வதின் அவசியம், நமது ஊராட்சியின் வரவு செலவு கணக்குகளை இணையத்தில் எப்படி பெறுவது மற்றும் இலஞ்சம் தவிர்த்து நெஞ்சம் நிமிர்த்த நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இராமநாதபுரம் மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் சரவணக்குமார் மிகச்சிறப்பாக எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்வில் பரப்புவயல் கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். கிராம பொதுமக்கள் அனைவரும் வரக்கூடிய 26-1-19 கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்வோம் என்று உறுதியளித்தனர்.

பொதுமக்கள் மத்தியில் நல்லதொரு விழிப்புணர்வு ஏற்படுத்தியதற்காக ஊரில் உள்ள இளைஞர்கள் நிகழ்வின் முடிவில் இனிப்புகள் வழங்கினார்கள். இந்த நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்த கலியநகரி ஊராட்சி பொறுப்பாளர் ராஜ்குமார் நன்றியுரை கூறினார்.

To Download Keelainews Android Application – Click on the Image

அக்டோபர் மாத இதழ்..

அக்டோபர் மாத இதழ்..