Home செய்திகள் இடைத்தேர்தல் பிரச்சாரத்தினை முதல்வர் நாளை தொடங்குகிறார் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ..

இடைத்தேர்தல் பிரச்சாரத்தினை முதல்வர் நாளை தொடங்குகிறார் – அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ..

by ஆசிரியர்

நெல்லையில் நடைபெற்ற முன்னாள் முதல்வர் எம்.ஜீ.ஆர் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ளும் செல்லும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி இனாம்மணியாச்சி விலக்கில் அதிமுக சார்பில் சிறப்பான வரவேற்ப்பு அளிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து அங்கு முதல்வர் உரையாற்ற உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குறித்து தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ ஆய்வு மேற்கொண்டார். அவருடன் மாவட்ட ஆட்சியர் சந்தீப்நந்தூரி, மாவட்ட எஸ்.பி. முரளிரம்பா , மாவட்ட வருவாய் அலுவலர் வீரப்பன், கோட்டாட்சியர் விஜயா, தாசில்தார் பரமசிவம், டி.எஸ்.பி. ஜெபராஜ் , முன்னாள் எம்எல்ஏக்கள் சின்னப்பன், மோகன், அதிமுக நகர செயலாளர் விஜயபாண்டியன், ஒன்றிய செயலாளர் அய்யாத்துரை பாண்டியன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

இதனை தொடர்ந்து அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ செய்தியாளர்களிடம் பேசுகையில் திருச்சி விராலிமலை நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்த பின்பு, நெல்லையில் நடைபெறும் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார். நெல்லைக்கு செல்லும் முதல்வருக்கு கோவில்பட்டி இனாம் மணியாச்சி விலக்கில் வைத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது, அதன்பின்பு தூத்துக்குடி மாவட்டத்தில் காலியாக உள்ள விளாத்திகுளம் ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிரச்சாரத்தினை முதல்வர் ஆரம்பிக்க இருக்கிறார். தமிழக அரசு வழங்கிய பொங்கல் பரிசினை பெற்ற மக்கள் மகிழ்ச்சியுடன் முதலில் வரவேற்க தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.மகளிர் குழுக்களுக்கு எண்ணற்ற திட்டங்களை செய்தது இந்த அரசுதான். இதற்கு முன்பிருந்த எந்த அரசும் செய்யாத வகையில் மகளிர்களுக்கு சுழற்சி முறையில் கடனைத் அதிகப்படுத்தியது அதிமுக அரசுதான், மகளிர்க்கு பொற்காலம் என்றால் அது ஜெயலலிதாவின் ஆட்சிக் காலம்தான்.அதிமுக ஆட்சி காலத்தில் மதுவிலக்கு எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது, திமுகவினர் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஒரு திட்டத்தைக் கூட நிறைவேற்றவில்லைபெண்கள் மத்தியில் ஜெயலிதாவுக்கு எவ்வளவு ஆதரவு இருந்ததோ, அதே ஆதரவு இந்த அரசுக்கும் உள்ளது. இதனை பொறுக்க முடியாத கனிமொழி போன்றவர்கள் விமர்சனம் செய்து தருவதாகவும்,ஜெயலலிதா என்ற ஆலமரத்தின் நிழலில் இருப்பதற்கு அருகதை உள்ளவர்கள் நாங்கள் தான், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா இருக்கும்போதே சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராக இருந்து பயிற்சி பெற்ற காரணத்தினால் தான் இன்றைக்கு ஜெயலலிதா எண்ணிய திட்டங்களை செயல்படுத்தி இந்த அரசை நடத்தி வருகின்றார் என்பது மக்களுக்கு தெரியும், ஜெயலிதாவின் ஆளுமைத்திறனை அவரது ஆன்மா இந்த அரசுக்கு அளித்து கொண்டு இருக்கிறது அதிமுகவில் யாரும் தனியாக எந்த நிலைப்பாட்டை எடுக்க மாட்டார்கள், பேசுகின்ற நேரத்தில் சந்தர்ப்பத்துக்கு ஏற்ப சில கருத்துக்களை தெரிவிக்கலாம், ஆனால் இறுதி முடிவை தேர்தல் அறிவிப்பு வந்தவுடன் ஒருங்கிணைப்பாளர் துணை முதல்வர், துணை ஒருங்கிணைப்பாளர் முதல்வர் மற்றும் தலைமை கழக நிர்வாகிகள் கூட்டணி முடிவு எடுப்பார்கள், ஜெயலலிதா இருக்கும் போது என்ன நிலையில் கூட்டணி முடிவெடுத்தார்கள், அவரது ஆன்மா வழிகாட்டலின் படி இன்றைக்கு தலைமை கட்சி நடத்துகிறது, தேர்தல் அறிவிக்கும் போது தகுந்த முடிவை எடுப்பார்கள், இந்த அரசை விமர்சிக்கும் கனிமொழி திமுகவினர் ஆட்சியில் இருக்கும்போது தொழில் முதலீட்டாளர் மாநாட்டை நடத்தியது இல்லை, அதிமுக அரசுதான் முதலில் நடத்தி காட்டியது, வரும் 23 24ஆம் தேதி சென்னையில் உலக தொழில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற உள்ளது. கடந்த மாநாட்டின் இலக்கு ஒரு லட்சம் கோடியாக இருந்தது, ஆனால் இரண்டு லட்சத்து 40 ஆயிரம் கோடி கிடைத்தது என்றார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!