திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் யாசகர்கள் தொல்லை…

ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அங்கு வந்து செல்லும் பக்தர்களிடம் 16 கால் மண்டபம் முதல் கோவில் சன்னதி வரை பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாக உள்ளது.  சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்கள் வரும் பக்தர்களுக்கு தொந்தரவு செய்வதுடன் கட்டாயமாக பணம் வசூல் செய்கிறார்கள்.

சில சமயம் கொடுக்காதவர்களை திட்டவும் செய்கிறார்கள். இதனால் பக்தர்கள் மன வேதனை அடைகிறார்கள். இதுகுறித்து கோவில் நிர்வாகமும் மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென பக்தர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்தனர். இவர்களை பிடித்து காப்பகங்களையும் அல்லது அவர்களுக்கு நல்ல ஒரு கைத் தொழில் செய்து முன்னேற உதவி செய்ய மாவட்ட நிர்வாகம் முன்வரவேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..