Home செய்திகள் முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி..

by ஆசிரியர்

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நிகழ்ச்சி 19/01/2019 அன்று காலை 11.30 மணியளவில் நடைப்பெற்றது.

இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி S.பாத்திமா மரியம் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து கல்லூரி முதல்வர் Dr.A.R.நாதிரா பானு கமால் ஜனவரி 25 தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு நாளாக அனுசரிக்கப்படுவதையும், மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் அரசியலில் ஈடுபட்டு இந்தியாவை நல்வழியில் கொண்டு செல்ல வேண்டும் என்று வரவேற்புரை வழங்கினார். மேலும் முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் அல்ஹாஜ்.S.M. முகம்மது யூசுப வாக்காளர் தனது வாக்கிற்கு பணம் வாங்க கூடாது என்றும் தகுதியானவர்களுக்கு மட்டுமே ஓட்டு போடவும் என அறிவுரை வழங்கி தலைமையுரை நிகழ்த்தினார் அதனைத் தொடர்ந்து வழக்கறிஞர்.திரு A.R. ரவிச்சந்திரன் ராமவன்ன நல்ல ஜனநாயகம் அமைய வேண்டும் என்றால் படித்தவர்கள் முதலில் ஓட்டு போட வேண்டும் என்று சிறப்புரை நிகழ்த்தினார்.

இராமநாதபுர முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜனாப். K. அசன் அலி அவர்கள் தகுதி இல்லாதவர்கள் அரசியலில் பதவி வகிப்பதையும், இலவச திட்டத்தை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி இராமநாதபுர மாவட்டத்தின் சீறும், சிறப்பும் பற்றியும் சிறப்புரையாற்றினார். அவர்களை தொடர்ந்து சிறப்பு விருத்தினர் ஜனாப். K.அசன் அலி, திரு.A.R.ரவிச்சந்திரன் ராமவன்னி, வழக்கறிஞர்.திரு P. முனியசாமி ஆகியோரிடம், மாணவிகள் அரசியல் மற்றும் வாக்குரிமை பற்றி கேள்வி எழுப்பி சந்தேகத்தை கேட்டு அறிந்தனர். இறுதியாக கணினி பயன்பாட்டியல் துறைத் தலைவர் அன்வர் ரொ.சாஹின் நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!