படகு மூழ்கி உயிரிழந்த இராமநாதபுரம் மீனவர் உடலுக்கு ஆட்சியர் அஞ்சலி..

இலங்கை கடற்படை விரட்டியதில் ஏற்பட்ட விபத்தில் படகில் இருந்து நடுக்கடலில் தவறி விழுந்து உயிரிழந்த மீனவர் உடலுக்கு ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவராவ் அஞ்சலி செலுத்தினார். ராமேஸ்வரம் துறைமுகத்தில் இருந்து 2 விசைப்படகுகளில் 9 மீனவர்கள் ஜன., 12 இல் தொழிலுக்குச் சென்றனர். ஜன., 13 அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்த போது கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் விரட்டினர். இதில் 2 படகுகளும் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. 9 மீனவர்களில் 8 பேர் மீட்கப்பட்டனர்.

இராமநாதபுரம் மாவட்டம் சித்தார்கோட்டை அருகே இலந்தை கூட்டம் பகுதியைச் சேர்ந்த மீனவர் முனியசாமி நடுக்கடலில் தவறி விழுந்து உயிரிழந்தார். இவரது உடலில் இலங்கை கடல் பகுதியில் கரை ஒதுங்கியது. கொழும்புவில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் எடுத்து வரப்பட்ட முனியசாமி உடலை ராமநாதபுரம் மீன்வளத் துறை அதிகாரிகள் வாகனம் மூலம் இலந்தைகூட்டம் கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. முனியசாமி உடலுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அஞ்சலி செலுத்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் முத்துமாரி, மீன் வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன் உடனிருந்தனர். முனியசாமி குடும்பத்திற்கு முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.5 லட்சம் வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..