தூத்துக்குடி மாவட்ட கடற்கரை பகுதியில் அரிய வகை மீன்கள் இறந்து கரை ஒதுங்கியதால் பரபரப்பு..

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான புன்னக்காயல் முதல் மணப்பாடு வரை பகுதியிலுள்ள கடற்கரை ஒரங்களில் அரிய வகை மீன்கள் ,மற்றும் வினோத உயிரினங்கள் ஒதுங்கியுள்ளதால் பொங்கல் விடுமுறையை களிக்க கடற்கரைக்கு சென்ற பொதுமக்கள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்,

தூத்துக்குடி மாவட்டத்தின் தெற்கு பகுதியான கடற்கரை பகுதியில் அரியவகை கடல்வாழ் உயிரினங்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கின ,சில வருடங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரத்தில் உள்ள, கோவளம் கடற்கரையில் சுமார் 1.5 கி.மீ. தூரத்திற்கு ஆயிரகணக்கான மீன்கள் இறந்த நிலையில் கரை ஒதுங்கியிருந்தது ,அவைகள் 250 கிராம் முதல் 1 கிலோ வரை எடை கொண்ட ஏற்றுமதி ரகமான கிளிஞ்சான் மீன்களும், நவரை, வெளா போன்ற மீன்களும் அதிகம் இறந்து கிடந்தன. இதுகுறித்து மீனவர் சங்கத்தை சேர்ந்த ஏ.டி.ராயப்பன் அப்போது கூறுகையில், கடற்கரையை ஒட்டியுள்ள ஸ்பிக் உரத் தொழிற்சாலையின் கழிவு நீர்தான் மீன்கள் இறப்புக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்,

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம், தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி ஆகியவை மேற்கொண்ட ஆய்வில், இந்த பகுதி கடல் நீரில் அளவுக்கு அதிகமாக அமோனியா இருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய பொறியாளரிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு, கடலுக்குள் கழிவுநீரை அனுப்ப அமைக்கப்பட்டுள்ள ராட்சத குழாய்களை அகற்ற வேண்டும் என்று கூறியிருந்தார்.

2016 ஆம் ஆண்டு திருச்செந்தூர் அருகே ஒரே நேரத்தில் 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கின. அதில் 45 திமிங்கலங்கள் உடனே இறந்துவிட்டன. 50 திமிங்கலங்களை உயிரோடு மீட்டு கடலில் விடும் பணி நடந்தது ஆனாலும் மீனவர்கள் இரவு வரை போராடி அவற்றை இழுத்துச் சென்று கடலுக்குள் விட்டனர். மீனவர்கள் கடலுக்குள் விட்ட திமிங்கலங்கள் அனைத்தும், மணப்பாடு கடற்கரை யில்மீண்டும் இறந்த நிலையில் கரை ஒதுங்கின. மணப்பாடு முதல் கல்லா மொழி வரை 95 திமிங்கலங்கள் கரை ஒதுங்கி உயிரை விட்டன, இந்நிலையில் மீண்டும் மீன்கள் இறந்து கரை ஒதுங்குவது ,மீனவர்கள் ,சமூக ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இது குறித்து மீன்வளத் துறை சார்பாக ஆய்வு நடத்த கோரி தமிழ்நாடு மக்கள்நலன்காக்கும் இயக்கத்தின் மாநில செயலாளார் M.மகாராஜன் தமிழக அரசிற்கு கோரிக்கைவிடுத்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-

தூத்துக்குடி மாவட்ட பகுதியிலுள்ள கடற்கரையில் அரிய வகை உயிரினமான சில மீன்கள் உயிரிழந்து கரை ஒரங்களில் ஒதுங்கியுள்ளது, அதிலும் குறிப்பாக தூத்துக்குடி தெற்கு பகுதியான புன்னங்காயல் முதல் மணப்பாடு வரை பகுதியிலுள்ள கடற்கரை ஒரங்களில் இந்த வகை உயிரினங்கள் ஒதுங்கியுள்ளது,இதற்கு என்ன காரணம் எதனால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிய வேண்டுமென இயற்கை ஆர்வலர்கள், மீனவர்கள் , மற்றும் பொது மக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்

மேலும் இது சம்பந்தமாக குறிப்பிட்ட பகுதியில் மீன்வளத்துறை சார்பாக கடற்கரையில் ஆய்வு செய்யவில்லை ஆகவே இது சம்பந்தமாக உடனே மாவட்ட நிர்வாகமும் மற்றும் தமிழக அரசும் சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும்,நாங்கள் பல முறை கோரிக்கை வைத்தும் இது வரை ஒருமுறை கூட மீன்வளத்துறை சார்பாக ஆய்வு நடத்தபடாமலே உள்ளது,ஆகவே உடனே ஆய்வு நடத்தி இதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டுமென இயக்கத்தின் சார்பாக மாவட்ட நிர்வாகத்தையும் தமிழக அரசை வலியுறுத்துகிறோம், என கூறியுள்ளார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..