கீழக்கரையில் 20/01/2019 அன்று இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம்..

கீழக்கரையில் 20/01/2018 ஞாயிற்றுக்கிழமை காலை 8மணி முதல் பகல் 1மணிவரை வள்ளல் சீதக்காதி சாலையில் இருக்கும் நாடார் பேட்டை ஆங்கில வழி பள்ளி வளாகத்தில் இராமநாதபுரம் மாவட்டம் பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கீழக்கரை ரோட்டரி சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமணை இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை மருத்துவ முகாம் நடைபெற இருக்கிறது.

இந்த மருத்துவ முகாமில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினர்களுக்கும் கண் சம்பந்தமான நோய்களுக்கு இலவசமாக மருத்துவம் செய்யப்படும். குறிப்பாக கண் புரை, கண்களில் நீர் வடிதல், விபத்தில் கண்களில் ஏற்பட்ட காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட உள்ளது. கண் புரையினால் பார்வை குறையுள்ளவர்களுக்கு கண் அறுவை சிகிச்சை முற்றிலும் இலவசமாக செய்யப்பட இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

To Download Keelainews Android Application – Click on the Image

ஜனவரி மாத இதழ்..

ஜனவரி மாத இதழ்..