போராட்டங்கள் காரணமாக வர்த்தகம் செய்ய கூடாத இடமாக தூத்துக்குடி மாறிவிடும்: ஸ்டெர்லைட் ஆலை துணைத் தலைவர் தனவேல் செய்தியாளர்களிடம் பேட்டி..

துாத்துக்குடியில், மக்கள் எதிர்ப்பைக் காரணம் காட்டி, கடந்த மே, 28 தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடியது. இதனை எதிர்த்து, வேதாந்தா நிறுவனம், பசுமை தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்தது. வழக்கை விசாரித்த பசுமைத் தீர்ப்பாயம், சில நிபந்தனைகளுடன் ஆலை இயங்கலாம் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்தும் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு நடைபெறும் போது, மீண்டும் 100 கோடி ரூபாய் நலத்திட்டங்களுக்கு செலவிடத் தயாராக இருப்பதாக தெரிவித்தது. இதன்படி, 6 புதிய சமூக நலத்திட்டங்களை துாத்துக்குடி மக்கள் மத்தியில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டங்கள் குறித்து ஆலையின் துணைத் தலைவர் தனவேல் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, கடந்த 6 மாதங்கள், நங்கள் மக்களுடன் கலந்துரையாடி, அவர்களின் விருப்படி, 6 புதியத் திட்டங்களை உருவாக்கியுள்ளோம். பசுமையானத் துாத்துக்குடி என்ற திட்டத்தின் மூலம், 3 வருடங்களில், 10 லட்சம் மரக்கன்றுகள் நடடுவது; ஆலையைச் சுற்றியுள்ள, 15 கிராமங்களில், 20 ஆயிரம் மக்கள் பயன்பெறும் வகையில் குடிநீர் திட்டம். 1500 மாணவர்கள் பயன்பெறும்வகையில், தரமான கல்விச் சாலை, 5000 மகளிர் பயனடையும் வகையில், மகளிர் சுயதொழில்மேம்பாடு மற்றும் வளர்ச்சித் திட்டம், 5000 இளைஞர்கள் பயன்பெற வேலை வாய்ப்பு பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டம், ஆண்டுக்கு 1.5லட்சம் மக்கள் பயன்பெறும் வகையில், 100 படுக்கை வசதி கொண்ட, பல்நோக்கு மருத்துவமனை ஆகிய, 6 திட்டகள் செயல்படுத்தப்பட உள்ளன. இந்த திட்டங்கள் நிறைவேறும் நாளில், துாத்துக்குடியின் சமூகபொருளாதாரம் மேம்பட்டு இருக்கும். ஆலையை மீண்டும் திறப்பதற்கும் இந்த திட்டங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. ஸ்டெர்லைட் ஆலை செய்த பல்வேறு சமூக நலத்திட்டகளில் இது அடுத்த நிலையே இத்திட்டங்கள் ஸ்டெர்லைட் ஆலையை மூடியதால் நகரத்தில் உள்ள மற்ற தொழிற்சாலைகள் மிகவும் பாதிக்கபட்டிருக்கிறது குறிப்பாக தூத்துக்குடி துறைமுகத்திற்கு அதிக பாதிப்பு ,அது மட்டுமில்லாமல் சுங்க வரி துறைக்கும் வரி வருவாயில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது,

வெளிநாட்டவர் பார்வையில் தூத்துக்குடி போராட்டங்கள் காரணமாக வர்த்தகம் செய்ய கூடாத இடமாக கூடிய விரைவில் map ல் குறிக்கப்படும், அப்படி மாறினால் தூத்துக்குடிக்கு வரவேண்டிய முதலீடுகள் கண்டிப்பாக வராது ,போன வருடம் GlM மாநாட்டில் கூறி இருந்த 66000 கோடி இன்னும் வரலில்லை வந்தால் தூத்துக்குடி சிங்கப்பூர் நகரமாக மாறி இருக்கும், என்றார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..