பசியிலிருந்து விடுதலை!!பயத்திலிருந்து விடுதலை!!.. கீழக்கரை SDPI கட்சி நிர்வாக குழு கூட்டம்….

11/01/2019 அன்று கீழக்கரை நகர் sdpi கட்சியின் நகர நிர்வாகம் மேற்கு ,கிழக்கு கிளை நிர்வாகம் மற்றும் செயற்குழு கூட்டம் நகர் தலைவர் அஷ்ரப் தலைமையில் நடைபெற்றது. தொகுதி துணைத் தலைவர் சித்திக் தொகுதிச் செயலாளர் நூருல் ஜமான், நகர் துணை தலைவர்-ஹாஜா அலாவுதீன், பொருளாளர்-சகுபர் சாதிக் இணை செயலாளர்-சுபைர் ஆபிதீன் முன்னிலை வகித்தனர். நகரச் செயலாளர் காதர் வரவேற்புரை நிகழ்த்தினார். சிறப்பு அழைப்பாளராக சவுதி மண்டலம் இந்தியன் சோஷியல் ஃபோரம் தேசிய துணைத் தலைவர் ஜஹாங்கீர் அரூஸி நிர்வாகிகளின் பணிகள் குறித்து விரிவாக விளக்கினார்.

அதனைத் தொடர்ந்து கீழ்கண்ட  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

#தீர்மானம்-01) நேற்று முன் தினம் புதுத்தெருவைச் சேர்ந்த ஹக்கு என்ற வாலிபர் சமூக விரோதிகளால் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார் அந்தக் கொலைக்கு கீழக்கரை நகர் sdpi கட்சி கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, கொலையுண்டவரின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றது. இனி வரும் காலங்களில் இது போன்ற சமூக விரோத சம்பவங்கள் நடக்கத்தவாறு கீழக்கரை காவல்துறை கூடுதல் பாது காப்பு வழங்க வேண்டும் என்று செயற்குழு கூட்டத்தின் வாயிலாக கேட்டு கொள்கின்றோம்..

#தீர்மானம்-02 மூன்றாவது வார்டுக்கு உட்பட்ட புது கிழக்குத் தெரு பகுதியில் அமைந்துள்ள பழைய குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்று பல்வேறு முறை sdpi கட்சி சார்பாக பல்வேறு மனுக்கள் கொடுத்தும் இன்று வரை எந்த நடவடிக்கையும் இல்லாமல் இருக்கின்றது. ஆகையால் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக குப்பை கிடங்கை அகற்றுவதோடு அந்த இடத்தில் பொதுமக்களுக்கு நடைப்பயிற்சி செல்வதற்குரிய பூங்கா அமைக்கவேண்டும் என்றும் இளைஞர்கள் விளையாடுவதற்கு விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும் என்றும் கீழக்கரை நகர் SDPI_ கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறது.

#தீர்மானம்_ 03 போதைப் பொருளால் இன்றைய இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் சீரழிந்து வருகின்றனர் அதற்கு கீழக்கரை நகர் sdpi கட்சி சார்பாக போதையினால் ஏற்படும் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் தெருமுனை கூட்டம் நடத்துவதாகவும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக-நகர் துணைத் தலைவர்- யாஸீன் நன்றியுரையாற்றினார்.இந்த நகர் செயற்குழு கூட்டத்தில் நகர் நிர்வாகிகள், மேற்கு கிளை மற்றும் கிழக்கு கிளை நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..