சென்னை ஓட்டேரியில் முன்விரோதம் காரணமாக ரவுடி தினேஷ் கொலை..

சென்னை பெரம்பூர் அகரத்தை சேர்ந்தவர் ரவுடி அப்பு@ தினேஷ்(31). இவர் மீது கொலை, வழிப்பறி, கொலை முயற்சி வழக்குகள் உள்ளன. குண்டர் சட்டத்தில் கைதாகி 2 நாட்களுக்கு முன் தான் சிறையில் இருந்து வெளிவந்தார்.

இந்தநிலையில் ஓட்டேரி ஸ்டீபன்சன் சாலையில் தனது உறவினர் (கள்ளக்காதலி) மற்றும் அவரது குழந்தையுடன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது வழிமறித்த கும்பல் தினேஷை சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர். இந்த சம்பவத்தை பார்த்தவர்கள் ஓட்டேரி காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து ரோந்து போலீசார் கொலை செய்த கும்பலை விரட்டிச்சென்று சதீஷ்குமார், சசி ஆகிய இருவரை கைது செய்தனர். தப்பி ஓடிய கதிர், மோனிஷ், கோகுல், சரவணன் ஆகிய 4 பேரை தேடி வருகின்றனர். கைதான சதீஷ்குமார், சசி ஆகியோரிடம் நடத்திய விசாரணையில், கொலையான தினேஷ் தங்கள் எதிர் கோஷ்டியை சேர்ந்தவர் என தெரிவித்துள்ளனர்.

செய்தி :- ஃபக்ருதீன், திண்டுக்கல்

Be the first to comment

Leave a Reply