முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஆங்கிலச் சங்கம் நிகழ்ச்சி..

முகம்மது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 12/01/2019 அன்று காலை 11.00 மணியளவில் ஆங்கிலச் சங்கம் நிகழ்ச்சி நடைப்பெற்றது. இந்நிகழ்ச்சியினை ஆங்கிலத் துறையைச் சார்ந்த முதலாமாண்டு மாணவி A.பாத்திமா ரிஸ்வின் இறைவணக்கத்துடன் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து ஆங்கிலத் துறைத் தலைவர் K.மெஹருன்னிஷா அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அத்துடன் கல்லூரி முதல்வர் Dr. A.R.நாதிரா பானு கமால் அவர்கள் மாணவிகள் அவர்களது திறமையை அறிந்து அதனை மேம்படுத்துமாறு மாணவிகளுக்கு அறிவுறுத்தி தலைமையுரை நிகழ்த்தினார். சிறப்பு விருந்தினர் Dr. S. ஜாஹிரா பானு M.A,M.Phil, Ph.D., ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை, ஸ்ரீ மீனாட்சி மகளிர் அரசினர் கலைக் கல்லூரி, மதுரை அவர்களுக்கு முகம்மது சதக் நிறுவனத்தின் சார்பாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மாணவிகளின் ஆங்கில இலக்கிய அணிவகுப்பு போட்டி நடைப்பெற்றது.

மேலும் சிறப்பு விருத்தினர் அவர்கள், மாணவிகளுக்கு ஆங்கிலத் தொடர்பு திறனை மேம்படுத்துவது பற்றியும்,ஆங்கில மொழியின் சிறப்புகள் பற்றியும் ஆங்கிலம் கற்பது மிக எளிது என்பதனை மாணவிகள் புரிந்துக் கொள்ளும் வகையில் சிறப்புரையாற்றினார். ஆங்கிலச் சங்கத்தின் சார்பாக நடைபெற்ற போட்டிகளில் பங்கு பெற்ற மாணவிகளுக்கு பரிசளித்து, சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. இறுதியாக ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியை செல்வி.S.துர்கா நன்றியுரை வழங்க இந்நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

Be the first to comment

Leave a Reply