வனத்துறை அமைச்சர் சீனிவாசன் பேருந்து நிலைய நுழைவு வாயிலை திறந்து வைத்து பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார்….

வத்தலக்குண்டுவில் அமைச்சர் சீனிவாசன் பஸ் நிலைய நுழைவுவாயிலை திறந்து வைத்து பள்ளி மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கினார்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு சுப்ரமணியசிவா நினைவு பஸ் நிலையத்திற்கு பேரூராட்சியினர் ரூபாய் 12 இலட்சம் செலவில் டைல்ஸ் கற்களாலான புதிய நுழைவு வாயில் அமைந்திருந்தனர். அதை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன் திறந்து வைத்தார். அதைத் தொடர்ந்து திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் பஸ் நிலையத்திற்குள் அமைத்திருந்த புதிய ஹைமாஸ் லைட்டை தொடங்கி வைத்தார்.

அதன் பிறகு வத்தலக்குண்டு மகாலெட்சுமி பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கும், வத்தலக்குண்டு அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கும் விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் .வினய் தலைமை வகித்தார். திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார் அதிமுக மாவட்ட செயலாளர் மருதராஜ், அதிமுக ஒன்றிய செயலாளர் பாண்டியன், நகர செயலாளர் பீர்முகமது, பள்ளி தாளாளர் ராம்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர், மாவட்ட கல்வி அதிகாரி சாந்தகுமார் வரவேற்றார். அமைச்சர் சீனிவாசன் சிறப்புரை ஆற்றி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கினார். விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜெயச்சந்திரன், வேதா, பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் குருராஜன், பேரூராட்சி செயல் அலுவலர் கமர்தீன், பள்ளி தலைவர் பாலகிருஷ்ணன், அதிமுக நிர்வாகிகள் மோகன், கனகதுரை, நாகூர்கனி, ஜான் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் பள்ளி தலைமை ஆசிரியர் பாண்டிஜோதி நன்றி கூறினார்.

நிலக்கோட்டை ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..