Home செய்திகள் மதுரை பகுதி ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஆணையர் அறிக்கை..

மதுரை பகுதி ஜல்லிக்கட்டு சம்பந்தமாக ஆணையர் அறிக்கை..

by ஆசிரியர்
மதுரை மாநகர காவல்துறை ஆணையர் டேவிட்சன் தேவாசீர்வாதம்  வெளியிட்ட பத்திரிக்கை செய்தி
1. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான உலக புகழ்  பெற்ற ஜல்லிக்கட்டு போட்டி 2019 ம் வருடம் மதுரை மாநகர் அவனியாபுரத்தில் வரும் 15.01.2019 -ம் தேதி தொடங்க உள்ளது.
2.  ஜல்லிக்கட்டு வீரர்களின் பாதுகாப்பிற்கும், விபத்து ஏதேனும் ஏற்பட்டால். உடனே உயர்தர முதலுதவியும், சகல வசதிகளுடன் கூடிய இரத்த வங்கியுடன் நடமாடும் மருத்துமனைகளும், மருத்துவர்களும், மருத்துவ பணியாளர்களும் பணியில் அமர்த்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
3. காளைகளை பிடிக்க தெரிந்த மற்றும் முறையாக பயிற்சி பெற்றவர்கள் போட்டியில் பங்கேற்க வேண்டும்.
4. பார்வையாளர்களை பாதுக்காக்கும் வகையில் இரண்டு அடுக்கு பாதுகாப்பு தடுப்பு வேலிகள் அமைக்கப்பட உள்ளது.
5.  பார்வையாளர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் அமர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியை பார்வையிடவும்.
6.  ஜல்லிக்கட்டு விழாவிற்கு வருகை தருபவர்கள் தங்களுக்கென  ஒதுக்கப்பட்ட இடங்களில் மட்டுமே வாகனங்களை நிறுத்த வேண்டும்.
7. இந்த ஜல்லிக்கட்டு விளையாட்டு போட்டி சிறப்பாகவும் பாதுகாப்பாகவும் நடைபெற பொதுமக்களும் மாடுபிடி வீரர்களும் மற்றும் மாட்டின் உரிமையாளர்களும் மதுரை மாநகர காவல் துறைக்கு முழு ஒத்துழைப்பு தருமாறு   கேட்டுக்கொள்ளப்படுகிறது.
கீழை நியூஸ் செய்திக்காக , மதுரை கனகராஜ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!