துபாயில் கர்ஜித்த இந்திய காங்கிரஸ் தலைவர் “ராகுல் காந்தி”…

இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி புலம் பெயர்ந்து வாழும் இந்தியர்கள் மத்தியில் இன்று (11/01/2019) உரை  நிகழ்த்தினார். இதில் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பி அன்பை வெளிப்படுத்தி, இளைய தலைவர் ராகுல் காந்தியை உற்சாகப்படுத்தினர்.

இந்த மைதானத்தில் இந்தியா – பால்கிஸ்தான் இடையே நடக்கும் போட்டியாக இருக்குமோ என்று மக்கள் பிரமிக்கும் அளவுக்கு அரங்கமே மக்கள் வெள்ளத்தால் மூழ்கியிருந்தது. அது மட்டுமல்லாது அரங்கிற்கு வெளியிலும் கூட்டம் கூட்டமாய் பேச்சை கேட்க திரண்டு இருந்தனர்.

ராகுல் காந்தியின் இந்த நிகழ்வின் முக்கிய அம்சமாக மாலை பிரமாண்ட கூட்டம் தொடங்கும் முன்பு அடிமட்ட தொழிலாளர் வர்க்கம் அதிகம் வசிக்கும் பகுதியான ஜெபல் அலி பகுதியில் அம்மக்கள் மத்தியில் உரையாற்றியது மட்டுமல்லாமல் அவர்கள் தோளோடு தோள் நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டது, மக்களின் தலைவர் என்பதற்கு உதாரணமாக அமைந்தது.

இந்நிகழ்ச்சியின் உரையின் துவக்கத்தில் ஐக்கிய அரபு அமீரக ஆட்சியாளர்கள் காட்டும் பணிவு,சகிப்புத்தன்மை ஆகியவற்றை பாராட்டினார். அதனை தொடர்ந்து இந்தியாவில் கடந்த நான்கு ஆண்டுகளாக சகிப்புத்தன்மையற்ற சூழல் நிலவி வருவதாகவும், வேலையில்லா திண்டாட்டமும், விவசாயிகள் வாழ்வாதாரம் நசுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார். அதனை சீர்ப்படுத்த வேண்டுமெனில் வெளிநாட்டில் வேலை செய்யும் உங்களை போன்ற துடிப்புள்ள இளைஞர்கள் தாய் நாடு திரும்பி எங்களோடு பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்..

மேலும் அவர் அமீரகம் வந்து இறங்கிய பொழுது துபாய் விமான நிலையமே அதிரும் அளவு எழுந்த கோஷமும், இன்று காங்கிரஸ் இளைய தலைவரின் உரையை கேட்க கூடியிருந்த கூட்டமும், இந்திய மக்களின் மாற்றத்தை வேண்டி காத்திருக்கும் எண்ணோட்டம் தெரிந்தது.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..