சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த வாலிபர் POCSO சட்டத்தின் கீழ் கைது..

மதுரை மாநகர் சிம்மக்கல் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த அருண்குமார், வயது (18/19), த/பெ வேல்முருகன் என்பவர் காதலிப்பதாக கூறி அருண்குமார் தனது வீட்டிற்கு சிறுமியை வரச்சொல்லி பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் இதனால் சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த விபரத்தை கூறியதால் பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் மதுரை மாநகர் தெற்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரை பெற்று அருண்குமார் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்து, நீதி மன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image