நிலக்கோட்டை ஒன்றியத்தில் பொங்கல் பரிசு வழங்கும் விழா. ..

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டையில் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் உள்ள ரேஷன் கடை தாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கும் விழா நிலக்கோட்டை முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது.

அம்மையநாயக்கனூர் முன்னாள் பேரூராட்சி தலைவர் தண்டபாணி, சங்கத் தலைவர். நிலக்கோட்டை முன்னாள் பேரூராட்சி தலைவர் சேகர், முன்னாள் சங்கத் தலைவர் ஜாபர் ஆகியோர்கள் முன்னிலை வைத்தனர். இதில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூபாய் ஆயிரமும், கரும்பு, சீனி, அரிசி, கிஸ்மிஸ் பழம், முந்திரி பழம் உள்ளிட்ட தொகுப்பு பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, சங்கச் செயலாளர் பொன்முருகன், அதிமுக நகர நிர்வாகிகள் செந்தில்குமார், மகாலிங்கம், சரவணன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை: ராஜா

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..