சுத்தமாக இருந்தால் 50 சதவீத மருத்துவச் செலவு மிச்சமாகும் : ஆளுநர் பேச்சு… புனித தீர்த்தங்கள் அர்ப்பணிப்பு..

இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பட்டணம்காத்தான் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கம் தொடர்பாக நடந்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்தார். மாணவர்கள் மத்தியில் அவர் பேசியதாவது:  இராமநாதபுரம் மாவட்டம் பெயரிலேயே ராமநாதசுவாமி என்ற கடவுள் பெயரை கொண்டுள்ளது. நான் மிகவும் பெருமைப்படுகிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தை சுத்தமாக வைத்துக்கொள்வது உங்கள் முக்கிய கடமை. நகர் முழுவதையும் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அதற்கு நான் கூறும் கருத்து. மாணவர்கள் முதலில் உங்கள் வீட்டை சுத்தமாக வைத்து கொள்ளுங்கள். அடுத்து உங்கள் அருகே உள்ள வீட்டில் உள்ள உறவினர்கள், நண்பர்களிடம் துாய்மை குறித்து விளக்கம் அளித்து, நீங்கள் வந்து எங்கள் வீட்டை பாருங்கள் என அழைத்து வந்து உங்கள் வீட்டை காட்டுங்கள். என் வீடு சுத்தம், என் நகரம் சுத்தம் என்பதன் மூலம் இந்தியா சிறந்த துாய்மையாக நாடாக மாறிவிடும். நான் எதிர்பார்க்கிறேன். இராமநாதபுரம் மாவட்டம் துாய்மை பாரத இயக்கத்தில் சிறந்த மாவட்டம் என விருது பெற வேண்டும். துாய்மையாக இருப்பதால் மருத்துவ செலவு 50 சதவீதம் குறைந்துவிடும். இதனால் தமிழகத்தின் பட்ஜெட் ஆயிரம் ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவ செலவு மிச்சமாகும். எனவே மாணவர்கள் துாய்மை பாரத இயக்கம் உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்” என பேசினார்.

மேலும் இராமேஸ்வரத்தில் விவேகானந்தா கேந்திரத்தின் பசுமை ராமேஸ்வரம் திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக ராமேஸ்வரம், தங்கச்சிமடம், பாம்பன் பகுதிகளில் 1964 புயலில் அழிந்த 30 தீர்தங்களை ரூ.5 கோடி செலவில் புனரமைத்தனர். இன்று காலை (12/01/2019)  நட வருண யாக பூஜையில் பங்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று பக்தர்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்..

.

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..