கீழக்கரை முகைதீனியா மெட்ரிக் பள்ளி ஆண்டு விழா…நாசா அமைப்பு சார்பாக மாணவர்களுக்கு சிறப்பு பரிசுகள்..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை வடக்கு தெரு முகைதீனியா மெட்ரிக்., மேல்நிலைப் பள்ளி 12ஆம் ஆண்டு ஜூனியர் பட்டமளிப்பு விழா, 28 ஆம் ஆண்டு விளையாட்டு மற்றும் ஆண்டு விழா நடைபெற்றது. மழலையருக்கு திருச்சி மாவட்ட காவல் முன்னாள் கண்காணிப்பாளர் ஏ.கலிய மூர்த்தி பட்டம் வழங்கி கவுரவித்தார். படிப்பில் சிறந்த பேச்சு, கவிதை போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு ராமநாதபுரம் முகமது சதக் ஹமீது மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் ஏ.ஆர். நதிரா பானு பரிசு வழங்கினார். பல்வேறு போட்டிகளில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு தாசில்தார் கே.எம்.தமீம் ராசா பரிசு வழங்கி பாராட்டினார்.

மேலும் இவ்விழாவின் ஒரு பகுதியாக கீழக்கரை வடக்குத் தெரு சமூக நல அமைப்பு (NASA) சார்பாக 10 மற்றும் 12ம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவிகளுக்கு ரொக்க பரிசு துபாய் மண்டல பொறுப்பாளர் வஜ்ருதீன் மற்றும் கீழை நியூஸ் செய்யது ஆப்தீன் ஆகியோர் வழங்கினர். இவர்களுடன் நாசாவின் மூத்த நிர்வாகிகள் மஹ்ரூஃப், பசீர், அஹமது மிர்சா, முகம்மது அலி மற்றும் பலர் உடனிருந்தனர்.

இந்நிகழ்வில் தாளாளர் அல்ஹாஜ் இ.எம்.எஸ்.மவ்ஸ் மொகைதீன், செயலாளர் முனைவர் எம்.எச்.செய்யது ரசிக் தீன், முதல்வர் முனைவர் என்.எம்.ஷேக் சேகு சகுபான் பாதுஷா மற்றும் மாணவ, மாணவியர், பெற்றோர், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image