சென்னை மாநகராட்சி துணை செயற் பொறியாளர் மீது லஞ்சப் புகார்..

சென்னைசென்னை மாநகராட்சியில் துணை செயற் பொறியாளராக பணியாற்றும் ரூகேஷ்குமார் என்பவர் கட்டிட அனுமதிக்கு மிரட்டி லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர், இது தொடர்பாக வழக்கறிஞரும், சமூக ஆர்வலரும், மணலி புது நகர் குடியிருப்போர் சங்க தலைவருமான கா.பாலமுருகன், சென்னை மாநகராட்சி ஆனையருக்கு அனுப்பியுள்ள புகாரில் சென்னை மாநகராகட்சி ஆணையர் அவர்களுக்கு, பெருநகர சென்னை மாநகராட்சி, மணலி மண்டலம் _2, வார்டு16 இங்கு 420 சதுரடி முதல் உள்ள கட்டிடங்களுக்கு அனுமதி பெற்று கட்டுமானம் செய்தாலும், இங்கு உள்ள துணை செயற் பொறியாளர் ரூகேஷ்குமார் என்பவர் ஒரு வீட்டிற்கு சுமார் 25,000/_ முதல் 50,000/_ வரை கையூட்டாக மிரட்டி பெறுகிறார். மேலும் இவர் அதிகளவில் கையூட்டு வாங்குகிறார் என புகார்கள் வந்து கொண்டே உள்ளன.

இந்த கையூட்டுகள் அனைத்தும் 16வது வார்டு மேற்பார்வையாளர் திரு. கோபி மூலமாகவே வசூல் செய்து கொடுக்கப்படுகிறது. இதனால் உடனடியாக நடவடிக்கை எடுத்து அப்பாவி குடிமக்களை காக்கும் படி கேட்டுக் கொள்கிறோம், தவறும்பட்சத்தில் மாநகராட்சி விஜிலென்சுக்கு புகார் அனுப்புவதுடன் லஞ்ச ஒழிப்பு துறைக்கும் புகார் அனுப்பி கையும் களவுமாக பிடித்து கொடுப்போம் என்பதை பனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என கூறிக் கொள்கிறோம், ” என கூறியுள்ளார்.

மேற்படி புகார் சென்னை மாநகராட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..