காவல்துறை நன்னடத்தை சான்று இனி முதல் ஆன்லைன்..

காவல்துறை நன்னடத்தை சான்றினை ஆன்லைன் மூலம் பெறும் சேவையை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா இன்று மாவட்ட காவல் துறை அலுவலகத்தில் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

www.eservices.tnpolice.govt.in என்ற இணையதளத்தின் மூலம் தனி நபர் நன்னடத்தை, வேலை நிமித்தமான சரிபார்ப்பு, வாடகைதாரரின் விபரம் சரிபார்ப்பு, வீட்டில் வேலையாட்கள் விபரம் சரிபார்ப்பு போன்ற நான்கு வகையான சான்றினை பெற முடியும்.

இதற்கு தனி நபர் நன்னடத்தை சான்று வேண்டுமானால் ரூபாய் 500/- தனியார் நிறுவனங்கள் வேலையாட்களுக்கான நன்னடத்தை சான்று பெற ரூபாய்1000/- கட்டணம் செலுத்த வேண்டும்.

கிரெடிட் கார்டு, டெபிட் கார்டுகளை பயன்படுத்தி ஆன்லைனிலேயே செலுத்தலாம், இதன் மூலம் இனி பொதுமக்கள் காவல் நிலையங்களுக்கு அலைய வேண்டியதில்லை, ஸ்டெர்லைட் போராட்டத்தில் பங்கெடுத்து வழக்கு பதியப்பட்டிருந்தால் அதுவும் அந்த சான்றிதழில் பதிவாகி வரும் நன்னடத்தை சான்றிதழை விண்ணப்பத்தை ஒரு வாரம் அல்லது 15 நாட்களுக்குள் பெற்றுக் கொள்ளலாம், தூத்துக்குடியில் மே 22 சம்பவத்தின் போது கண்காணிப்பு கேமராக்கள் சேதப்படுத்தப்பட்டது இதனை தொடர்ந்து தற்போது அதனை பழுதுபார்த்து புதுப்பிக்கப்படும் மேலும் மாநகர் பகுதியில் கூடுதலாக கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்படும்

பொங்கல் பண்டிகை காலத்தில் கூடுதலாக முக்கியமான பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள் – முரளி ரம்பா என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா கூறினார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..