Home செய்திகள் தேனி உத்தமபாளையம் பகுதிகளில் ஆதார் அட்டைக்காக அல்லல்படும் அப்பாவிகள், சிறப்பு முகாம் நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை…

தேனி உத்தமபாளையம் பகுதிகளில் ஆதார் அட்டைக்காக அல்லல்படும் அப்பாவிகள், சிறப்பு முகாம் நடத்த வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை…

by ஆசிரியர்

தேனி மாவட்டத்தில், மேகமலை, ஹைவேவிஸ், மணலார், அப்பர்மணலார், வென்னியார், மகராஜா மெட்டு மற்றும் இரவங்கலாக் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் அதிகமாக ஹைவேவிஸ், மேகமலையில் தான் வசித்து வருகிறார்கள். 10 ஆயிரம் பேர் வரை வசித்து வந்த நிலையில், சம்பளப் பிரச்சினை, மருத்துவச் சிகிச்சை, குறிப்பாக பஸ் போக்குவரத்து போன்ற காரணங்களால், பிள்ளைகளின் எதிர்கால நலன் கருதி சொந்த ஊர்களுக்குச் சென்று விட்டார்கள்.

தற்பொழுது ஜார்க்கண்ட் மாநிலத்தவர் உட்பட சுமார் 3000 பேர் வரை வசித்து வருகிறார்கள், வெளியூர்களுக்குச் செல்பவர்களும், பணி ஓய்வு பெறுபவர்களும், வேலை பார்த்த கணக்கு முடிப்பதற்கு ஆதார் அட்டை கட்டாயம் கேட்பதால் 30 வருடத்திற்கு முன் எஸ்டேட்டில் வேலைக்குப் பதிவு செய்தவர்களின் பிறந்த தேதியும், ஆதார் அட்டைத் தேதியும், மாறி உள்ளது. எனவே இதைத் திருத்தம் செய்வதற்கும், பெயர், முகவரி போன்தவைகளை திருத்தம் செய்வதற்கும் எஸ்டேட் நிர்வாகம் நிர்ப்பந்தித்து வருகின்றன. எனவே மக்கள் ஆதார் அட்டை திருத்தப் பணிக்காக தங்களது வேலையை விட்டு, உத்தமபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு குடும்பத்துடன் வருகின்றன. இங்கே சரியான ஆவணங்கள் இல்லை என காரணம் காட்டி திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.

எனவே மக்கள் ஏமாற்தத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இதில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு அப்பாவி தொழிலாளிகளுக்கு உதவும் விதமாக் பேருராட்சி அலுவலகத்தில் சிறப்பு முகாம் அமைத்து உதவுமாறு பொதுமக்கள் சார்பாக கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- பால் பாண்டி, தேனி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!