Home செய்திகள் “ஹலோ போலீஸ்” 6 மாதத்தில் 698 அழைப்புகள் அனைத்திற்க்கும் உடனடி நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு பொது மக்கள் பாராட்டு..

“ஹலோ போலீஸ்” 6 மாதத்தில் 698 அழைப்புகள் அனைத்திற்க்கும் உடனடி நடவடிக்கை : தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு பொது மக்கள் பாராட்டு..

by ஆசிரியர்

“ஹலோ போலீஸ்” என்ற அமைப்பு மூலம் 6 மாதத்தில் பொது மக்களிடம் இருந்து வந்த 698 அழைப்புகள் அனைத்திற்க்கும் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது , இதன் மூலம் தூத்துக்குடி மாவட்ட காவல் துறைக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முரளி ரம்பா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளார், இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தூத்துக்குடி மாவட்ட பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு உடனடியாக உதவிடவும், உரிய நடவடிக்கை எடுப்பதற்காகவும்,தூத்துக்குடி மாவட்டகாவல்துறை அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, “ஹலோ போலீஸ்” என்ற அமைப்பை கடந்த 04.07.2018 அன்று ஏற்படுத்தி துவக்கி வைத்தார்.அதில் 31.12.2018 வரை சுமார் 6மாதத்தில் 698 அழைப்புகள் வந்து உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பொதுமக்கள் தங்களுக்குரிய பிரச்சனைகள் குறித்தும், அனைத்து சட்ட விரோதமான செயல்கள் குறித்தும், சாலை விபத்து, மணல் கடத்தல், போலி மதுபானம் மற்றும் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தல், ரவுடித்தனம், குடும்பத்தகராறு, குழந்தை திருமணம், பாலியல் தொந்தரவுகள் , இயற்கை பேரிடர் தீவிபத்து, மோசடி மற்றும் மிரட்டல் போன்ற எவ்விதமான தகவல்கள் இருந்தாலும் “ஹலோ போலீஸ்” என்ற அமைப்பின் அலைபேசி எண். 95141 4100 என்ற எண்ணிற்கு அலைபேசி மூலமாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ தகவல் அளிக்கலாம்.

மேலும் தகவல் தருபவர்கள் பெயர், விலாசம் அவர்களது தொலை பேசி எண் இரகசியமாக வைக்கப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. தகவல் தருபவர்கள், தங்கள் பெயர்களை கூற விரும்பாவிட்டால் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்களுடைய அலைபேசி மற்றும் தகவல் தொடர்பு எண் அளித்தால் காவல்துறையினர் அந்தப்பகுதிக்கு வந்து, உங்கள் மூலமாக சரியான சமபவ இடத்திற்கு விரைந்து சென்று நடவடிக்கை எடுக்க ஏதுவாக இருக்கும்.இந்த அமைப்பு 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. இந்தப்பிரிவு 04.07:2018 அன்று ஆரம்பித்தது முதல் 31.12:2018 வரை இந்த அமைப்பிற்கு அலைபேசி மூலம் 594, வாட்ஸ் ஆப் மூலம் 98 மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் 6 ஆக மொத்தம் 698 அழைப்புகள் வந்துள்ளன. அவ்வாறு வநத அழைப்பகளில் அடி, தடி தகராறுகள் குறித்து 174, மணல் கடத்தல் குறித்து 71, சட்ட விரோதமான செயல்கள் குறித்து 69, நிலத்தகராறு சம்மந்தமாக 51, சாலை போக்குவரத்து குறித்து 43, குடும்பத்தகராறு குறித்து 42, மோசடி குறித்து 26,மிரட்டல் சம்மந்தமாக 24, களவு சம்மந்தமாக 20, மற்றும் ஆவணம் தொலைந்தது, பெண்கள் வன்கொடுமை, மனநோயாளி, காணாமல் போனவர்கள், தீ விபத்து, குழந்தை திருமணம் மற்றும் இதர தகவல்கள் குறித்த அழைப்புகள் 178 ஆகும்.

இந்த அழைப்புகள் அனைத்திற்கும் காவல்துறை விரைந்து நடவடிக்கை எடுத்துள்ளது. பெரும்பாலான தகவல்கள் காவல்துறைக்கு பயனுள்ளதாக இருந்தது. இது பொது மக்கள் மத்தியில் பெரும் பாராட்டை பெற்றுள்ளது ,காவல்துறையின் இந்த செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது ,ஆகவே பொது மக்கள் மேற்படி அலைபேசி எண்ணை பயன்படுத்தி காவல்துறை உதவியை பெற்று தீர்வு கண்டு கொள்ளுமாறும், சட்டவிரோதமான செயல்கள் குறித்து பொது மக்களுக்கு தெரிய வரும் தகவல்களை இந்த அலைபேசி எண் 95141 44100ல் நேரடியாகவோ அல்லது வாட்ஸ் ஆப் மூலமாகவோ தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா, தெரிவித்துள்ளார்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!