Home செய்திகள் இரவு, பகல் பாராமல் அயராது உழைக்கும் காவலர்கள், தமது உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை காட்ட வேண்டும்”. ஆயுதபடை காவலர்களுக்கான கண் மருத்துவ சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து S P முரளி ரம்பா பேச்சு…

இரவு, பகல் பாராமல் அயராது உழைக்கும் காவலர்கள், தமது உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை காட்ட வேண்டும்”. ஆயுதபடை காவலர்களுக்கான கண் மருத்துவ சிகிச்சை முகாமை தொடங்கி வைத்து S P முரளி ரம்பா பேச்சு…

by ஆசிரியர்

இரவு, பகல் பாராமல் அயராது உழைக்கும் காவலர்கள், தமது உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை காட்ட வேண்டும் என்று  தூததுககுடி மாவட ஆயுதபடை காவலர்களுககான கண் மருத்துவ சிகிச்சை முகாமை துவக்கி வைத்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தமுரளி ரம்பா பேசினார்.

தூத்துக்குடி மாவட்ட காவலதுறை மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை ஆகியோர் இணைந்து தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவலர்களுக்கான கண் சிகிச்சை மருத்துவ முகாம் தூத்துக்குடி ஆயுதப்படை வளாகத்தில் மருத்துவமனை பொது மேலாளர் திரு.உலகநாதன், மருத்துவர் திருமதி . தங்கம் ஆகியோர் தலைமையில் இன்று துவங்கியது, முகாமை காவல்துறை துணை கண்காணிப்பாளர் திரு.மாரியப்பன் மற்றும் காவல் ஆய்வாளர் திரு.கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

காவலர்களுக்கான இந்த முகாமை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா துவக்கி வைத்து கண் பரிசோதனை செய்து கொண்டார், பின்னர் சிறப்புரையாற்றிய அவர் பேசுகையில்:-

“கண் குறைபாடுகள் வயது முதிர்ந்தவர்களுக்குத்தான வரும் என்பதற்கில்லை, இளைஞர்களுக்கும் வருவதற்கு வாய்புள்ளது. ஒரு சிலர் தூரப்பார்வை மற்றும் கிட்டப்பார்வை என குறைபாடுகள் ஏற்பட்டு பாதிப்படைந்துள்ளனர். சமீபத்தில் நடைபெற்ற தொழில் நுட்ப உதவி ஆய்வாளருக்கான தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு நடந்த மருத்துவ பரிசோதனையில், ஒரு சிலருக்கு கண் பார்வையில் குறைபாடுகள் இருப்பது தெரியவந்துள்ளது. ஆகவே எந்த ஒரு நோயையும், ஆரம்பத்திலேயே மருத்துவ பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக்கொண்டால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாத்துக்கொள்ளலாம்,

காவல்துறையில் நாம் எல்லோரும் இரவு, பகல் என பாராமல் அயராது உழைத்து வருகிறோம். ஆகவே நாம், நமது உடல் நலத்தை பேணுவதிலும் அக்கறை காட்ட வேண்டும். மருத்துவ பரிசோதனை செய்து கொண்டால், ஏதேனும் குறைபாடுகள் இருப்பின், அதற்கு தகுந்தாற்போல் சிகிச்சை பெறுதல், உடற்பயிற்சி செய்தல் மற்றும் உணவு பழக்க வழக்கத்தை மாற்றிக்கொள்ளுதல் போன்ற அறிவுரைகளை மருத்துவர்கள் வழங்குவார்கள், எனவே உங்கள் குடும்பத்தார்கள் அனைவருக்கும் கண்பரிசோதனை செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறைபாடுகள் உள்ளவர்களுக்கு உரிய சிகிச்சையளிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என கூறினார்.

இந்த முகாமில் ஆயுதப்படை சார்பு ஆய்வாளர்கள், ஆண், பெண் தலைமை காவலர்கள் மற்றும் குடும்பத்தார்களும் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!