Home செய்திகள் தூத்துக்குடியில் வெளிநாட்டு பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்தி வணிகர் சங்கம் போராட்டம்..

தூத்துக்குடியில் வெளிநாட்டு பிளாஸ்டிக் பொருட்களை கொளுத்தி வணிகர் சங்கம் போராட்டம்..

by ஆசிரியர்

தூத்துக்குடியில் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை தீ வைத்து கொளுத்தி தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு வணிகர்சங்க தலைவர் வெள்ளையன் தலைமையில் மணிநகரில் உள்ள வியாபாரிகள் சங்கம் முன்பு நடந்த அறப்போராட்டத்தில் வர்த்தகர்கள் கலந்து காெண்டு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட பொருட்களை தீ வைத்து கொளுத்தினர் அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த இன்ஸ்பெக்டர் ரெனியல் ஜேசுபாதம் தலைமையிலான போலீசார் உடனே தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர். பின்னர் வியாபாரிகள் இனி அன்னிய நாட்டு பொருட்களை விற்க மாட்டோம் என உறுதிமாெழி எடுத்தனர். இதில் தூத்துக்குடி வணிகர் சங்க தலைவர் விநாயகமூர்த்தி, பொது செயலாளர் பாஸ்கரன், பொருளாளர் செந்தில் ஆறுமுகம் உள்ளிட்ட ஏராளமான வியாபாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் வெள்ளையன் கூறுகையில் , தமிழகத்தில் 14 வகை பொருட்களுக்கு ஜன 1ம் தேதி முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகம் முழுவதும் சிறுகுறு வணிகர்கள் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு, 1 ம் தேதி முதல் கடையடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். மேலும் வெளிநாட்டு பொருட்களை இந்தியாவில் விற்பனை செய்ய மத்தியஅரசு ஊக்கமளித்து வருகிறது. இதற்கு தமிழகஅரசு ஆதரவு தெரிவித்து, உள்நாட்டில் தயாராகும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளதை வணிகர்சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

இதை கண்டித்து தமிழகம் முழுவதும் ஜன 1 ம் தேதி முதல் 2 ம் சுதந்திரபோராட்டம் மகாத்மாகாந்தி, வஉசிதம்பரனார், வழியில் துவக்கியுள்ளோம். போராட்டம் வரும் 6 ம் தேதி வரை நடைபெறும். பொங்கல் பண்டிகைக்கு பின் போராட்டம் தமிழகம் முழுவதும் எழுச்சி பெற்று பெரிய போராட்டமாக தீவிரமடையும். மொத்தமாக கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் மறியல், ஆகியவற்றில் வணிகர்கள் ஈடுபட உள்ளனர். எனவே உடனே தமிழகஅரசு சிறுகுறு வணிகர்களை பாதிக்காத வகையில் பிளாஸ்டிக் பொருட்களை மறுசுழற்சி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார் . பின்னர் மாநகராட்சி அலுவலகம் சென்று ஆணையரிடம் மனு அளித்தனர்.

இந்தநிலையில் தூத்துக்குடி ராஜாஜி பூங்கா எதிரே உள்ள சூப்பர் மார்க்கெட்டில் தடை செய்யப்படாத பொருட்களையும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகள் எனக்கூறி மாநகராட்சி ஊழியர்கள் அள்ளிச் சென்றதால் கோபமடைந்த வியாபாரிகள் மாநகராட்சி வாகனத்தை முற்றுகையட்டு மறியல் செய்தனர் ,இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது ,இதனை எதிர்த்து வணிகர் சங்க பேரவை தலைவர் வெள்ளையன் தலைமையில் வியாபாரிகள் ஒன்று திரண்டு வாகனத்தை முற்றுக்கையிட்டனர் ,பின்னர் போலீசார் தலையிட்டதின் பேரில் அவர்கள் கலைந்து சென்று மாநகராட்சி ஆணையர் அல்பி ஜான் வர்கிசீடம் முறையிட்டனர் ,பின்னர் அவருடன் ஏற்பட்ட பேச்சு வார்த்தைக்கு பிறகு அமைதியாக கலைந்து சென்றனர் இதனால் தூத்துக்குடியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!