சிலம்பம் ஆசானுக்கு சாதனை விருது…

தமிழகத்தில் உள்ள பாரம்பரியம் மிக்க தற்காப்பு கலைகளில் சிலம்பாட்டமும் ஒன்று. பழங்கால சினிமாவில் அதிக முக்கியத்துவம் பெற்ற இக்கலை மீது இன்றைய தலைமுறையினர் கற்கும் ஆர்வம் குறைய துவங்கியது. அழிவின் விளிம்பிற்கு செல்வதில் இருந்து மீட்டெடுத்து, சிலம்பாட்டத்தில் பல்வேறு யுக்திகளை கையாண்டு சிறுவர், சிறுமியர் முதல் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர் மற்றும் நகர் புற இளைஞர்களிடம் எடுத்துச் சென்று தமிழர் வீர விளையாட்டான சிலம்பாட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் இராமநாதபுரம் லோக சுப்ரமணியன்.

கடந்த 20 ஆண்டுகளில் ராமநாதபுரம் மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் சிலம்பாட்ட சாதனை படைத்து, கடந்த பல ஆண்டுகளாக தலைநகர் டில்லியில் மாணவர்களுடன் சென்னை தமிழர் பெருமையை தேசமறிய செய்துள்ளார். இவரது 20 ஆண்டு கால சாதனையை கவுரவிக்கும் விதமாக வில் ஸ்டேட் ரிக்கார்டுஸ் விருதை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவிடமிருந்து, சிலம்பாட்ட பயிற்றுநரும், ஜவஹர் சிறுவர் மன்ற திட்ட மேலாளருமான எம்.லோக சுப்ரமணியன் பெற்றுக் கொண்டார்.

இந்நிகழ்வில் மண்டல கலை, பண்பாட்டு துறை இயக்குநர் (பொறுப்பு) சுந்தர், வில் ஸ்டேட்ஸ் ரிக்கார்ட்ஸ் நிறுவனர் ஆ.கலைவாணி, செயலர் தஹ்மிதா பானு ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..