Home செய்திகள் பாம்பன் பாலத்தில் வாகனம் நிறுத்தினால் அபராதம்.. 1ம் தேதி முதல் அமல்…

பாம்பன் பாலத்தில் வாகனம் நிறுத்தினால் அபராதம்.. 1ம் தேதி முதல் அமல்…

by ஆசிரியர்

பாம்பன் சாலை பாலத்தில் நிலவும் போக்குவரத்து நெரிசல் குறித்து இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். அப்பொழுது  அவர் கூறுகையில்,  ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. தினமும் ஆயிரம் இலகு ரக வாகனங்கள், 800 கனரக வாகனங்கள் வருகை தருகின்றன. ராமேஸ்வரத்திற்கு தற்போது பாம்பன் 2.345 கி.மீ., சாலை மட்டுமே வழியாக உள்ளது. ராமேஸ்வரம் மார்க்கத்தில் 600 மீ., நீளம் மண்டபம் மார்க்கத்தில் 900 மீ., நீளம் பாலத்தின் இறங்கு தலங்களாக உள்ளது. வெளியூர் மக்கள் இப்பாலத்தின் மையப் பகுதியில் நின்று போட்டோ எடுக்க தங்கள் வாகனங்களை நிறுத்துவதால் போக்குவரத்து  நெரிசல் நிலவுகிறது. இதனை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள, மையப்பகுதியில் 500 மீ., நீளம் வாகன நிறுத்தம்ம முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

மண்டபம் மார்க்கத்தில் 3, ராமேஸ்வரம் மார்க்கத்தில் 2 இடங்கள் தலா 100 மீ., வீதம் சிறு, சிறு இடைவெளி விட்டு 500மீ., நீளத்திற்கு பயணிகள் இறக்கி விடும் இடம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பயணிகளை இறக்கி விடும் வாகனங்களுக்கு ராமேஸ்வரம், மண்டபம் மார்க்கங்களிலும் இலகு ரகம் கனரகம்  வாகன நிறுத்துமிடங்கள் கண்டறியப்பட்டுள்ளது. பாம்பன் சாலை பாலத்தில் போக்குவரத்து, விதிமீறல்களை கண்காணிக்க 35 போலீசார் நியமிக்கப்பட்டுள்ளனர். ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர், ராமேஸ்வரம் காவல் துணை கண்காணிப்பாளர் ஒருங்கிணைந்து கண்காணிக் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாம்பன் சாலை பாலத்தில் மேற்குறிப்பிட்டவாறு பயணிகள் இறக்கி விடும் இடத்தில் மட்டுமே  வாகனங்களை நிறுத்தி பயணிகளை இறக்கி விட்ட பின் நிர்ணயித்துள்ள வாகன நிறுத்துமிடத்தில் மட்டுமே  வாகனங்களை நிறுத்திட வேண்டும். இதனால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் தவிர்க்கப்படுவதுடன் வாகன நிறுத்தம் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளபாலத்தின் மைய பகுதியில் சுற்றுலா பயணிகள் சிரமமின்றி பாலம் மற்றும் கடலின் அழகை கண்டு களிக்க வாய்ப்பாக அமையும். பாலத்தில் விதிமீறும் வாகனங்களுக்கு ரூ.600 அபராதம் வசூலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது’ என தெரிவித்தார்.

ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சுமன், ராமேஸ்வரம் காவல்  துணை கண்காணிப்பாளர் மகேஷ், வட்டார போக்குவரத்து அலுவலர் செல்வகுமார், தேசிய நெடுஞ்சாலை உதவி கோட்ட பொறியாளர் திரு மாரியப்பன், வட்டாட்சியர்கள் ஜபார், கார்த்திகேயன் உடனிருந்தனர்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!