தொழில்துறை முன்னேற்றத்தில் தர வரிசை 6 ல் இருந்து 2 ஆவது இடத்திற்கு தமிழகம் முன்னேற்றம்: அமைச்சர் கடம்பூர் ராஜு பேச்சு…

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டத்தில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு NCAER என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய ஆய்வின்படி மாநிலங்களில் ஒட்டுமொத்த தொழில்துறை முன்னேற்றத்திற்கான தர வரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த தமிழகம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது என கூறினார்.

தூத்துக்குடியில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மாவட்ட அளவிலான சிறப்பு கூட்டம் இன்று நடைபெற்றது இதில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூஆற்றிய உரையில் தாராளமயமாக்கல் கொள்கை அறிவிக்கப்பட்டது முதல் முதலீடுகளை ஈர்ப்பதில் தொழில் வளர்ச்சி ஊக்குவிப்பதற்கும் வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காக இந்தியாவில் உள்ள மாநிலங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது, தற்போது குஜராத் ஆந்திரப் பிரதேசம் மத்திய பிரதேசம் ராஜஸ்தான் உத்ரகாண்ட் போன்ற மாநிலங்கள் தொடர்ச்சியாக இவ்வாறான மாநாடுகளை நடத்தி உலக அளவில் முதலீட்டாளர்களை ஈர்க்க முயற்சி செய்து வருகின்றனர்.

இதற்கு முன்னோடியாக தமிழக வரலாற்றில் இதுவரை எந்த அரசும் கண்டிராத வகையில் மாபெரும் உலக முதலீட்டாளர்கள் சந்திப்பு தொழிற்புரட்சி மாநாட்டை கடந்த 2015ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 9 மற்றும் 10 ஆம் தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில் அம்மா அவர்கள் சீரோடும் சிறப்போடும் நடத்திக்காட்டி உலக முதலீட்டாளர்களின் கவனத்தை தமிழகத்தை நோக்கி திருப்பி மாபெரும் வெற்றி கண்டார்கள். சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாயை மட்டும் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட அந்த உலக முதலீட்டாளர்கள் மாநாட்டு சந்திப்பு அம்மா அவர்களுடைய அயராத உழைப்பாலும் தன்னுடைய நிர்வாகத் திறமையாலும் உத்தேசிக்கப்பட்ட இலக்கை தாண்டி 2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி ரூபாய் மதிப்புள்ள 98 திட்டங்கள் தமிழகத்தை நோக்கி வருவதற்கு வழி வகை செய்தார்கள்,

இதன் விளைவாக ஒரு லட்சத்தி 4286 கோடி ரூபாய் மதிப்புள்ள 50 திட்டங்கள் தொழில் துறை மூலம்மும் , ஒரு லட்சத்து 7 ஆயிரத்து 136 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் எரிசக்தி துறை மூலமாகவும் , 30 ஆயிரத்து 738 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தகவல் தொழில்நுட்பம் கைத்தறி கால்நடை பராமரிப்பு பால்வளம் மீன்வளம் வேளாண்மை மற்றும் சிறு குறு நடுத்தர நிறுவனங்கள் துறைகள் மூலமாகவும் ஈர்க்கப்பட்டது , இதுவரை 62 ஆயிரத்து 378 கோடி மதிப்பிலான 64 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன இதன் மூலம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 27 நபர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன அந்த முதலீடுகளுக்கான காலஅவகாசம் 3 முதல் 7 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் அத்தகைய திட்டங்களை விரைவில் செயலாக்கத்திற்கு கொண்டுவர அம்மா அவர்களின் வழியில் செயல்பட்டுவரும் அண்ணன் எடப்பாடி அவர்களின் தலைமையிலான அரசு முனைந்து செயல்பட்டு கொண்டிருக்கிறது.

கடந்த சந்திப்பின்போது ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை குறித்து அரசு அவ்வப்போது ஆய்வு கண்காணிப்புகளையும் நடத்தி வருகிறது ஒவ்வொரு திட்டத்திற்கும் ஒரு உயர் அதிகாரியை நியமித்து அந்தத் திட்டங்களின் செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன அந்த திட்டங்களுக்கு தேவையான அனுமதிகளை விண்ணப்பங்கள் பெறப்பட்ட 30 நாட்களுக்குள் வழங்கவும் அரசு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் தொழில்துறை அமைச்சர் தலைமைச் செயலாளர் மற்றும் தொழில்துறை செயலாளர்களுடன் இந்த திட்டங்களின் செயல்பாடுகளை உன்னிப்பாக ஆய்வு செய்து தமிழகத்தை முன்னோடி மாநிலமாக ஆக்க அயராது முயற்சி செய்து வருகிறார் , இதன் விளைவாக சமீபத்தில் NCAER என்ற நிறுவனம் இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்திய ஆய்வின்படி மாநிலங்களில் ஒட்டுமொத்த தொழில்துறை முன்னேற்றத்திற்கான தர வரிசையில் ஆறாவது இடத்தில் இருந்த தமிழகம் இன்றைய தினம் இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது ,GIM 2015 சந்திக்கும் விளைவாக மிகப்பெரிய உற்பத்தி நிறுவனமான CEAT நிறுவனம் தமிழகத்தில் தொழில் துவங்க இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நாலாம் நாள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது என்பதை உங்களிடம் பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன்,

இத்தகைய சூழ்நிலையில் நம்முடைய தூத்துக்குடி மாவட்டம் மிகச்சிறந்த வணிகத் துறைமுகத்தையும் மீன்வளத்தையும் அறிவுத்திறன் மிக்க தொழில்நுட்ப வல்லுனர்களையும் பல்வேறு குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தன்னகத்தே கொண்ட மாவட்டமாகத் திகழ்கிறது நம்முடைய மாவட்டத்தை சேர்ந்தவர்கள்தான் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சிறு குறு தொழிலதிபர்கள் மற்றும் வணிகர்களாக சிறந்து விளங்குகிறார்கள், 2019ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள GIM 2019 உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு இந்த மாவட்டத்தில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில்தான் தமிழக முதலமைச்சர் அண்ணன் எடப்பாடி அவர்களின் உத்தரவின் பேரில் இன்றைய தினம் இந்த சிறப்பு நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களின் தலைமையில் இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை உயர்த்துதல் தொழில்வளர்ச்சியில் தமிழகத்தை முதலிடத்துக்கு கொண்டு வருதல் அடுத்த 10 ஆண்டுகளில் உள்கட்டமைப்புத் துறையில் பெரிய அளவில் முதலீட்டை ஈர்த்தல் ஆகிய இலக்குகளை அடைவதற்கு சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பும் மிகவும் முக்கியமானது, சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நல்ல நிலையில் இயங்கினால் பெரும் தொழில்கள் வளர்ச்சி அடையும், பெரும் தொழில் வளர்ச்சி அடையும் போது உலக முதலீட்டாளர்கள் நம்மை நோக்கி தானாக வருவார்கள், எனவே இங்கு வருகை புரிந்துள்ள சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் நம்முடைய மாவட்ட ஆட்சித்தலைவர், ஊரகத் தொழில் துறை கூடுதல் இயக்குனர், மாவட்ட தொழில் மையத்தின் துணை இயக்குனர், மற்றும் மாவட்ட தொழில் மையத்தின் மேலாளர் ஆலோசனை பெற்று சென்னையில் நடைபெற உள்ள GIM 2019 உலக முதலீட்டாளர் மாநாட்டில் உங்களுடைய பங்களிப்பை வழங்கி இந்த மாநாடு வெற்றி பெற உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசின் சார்பிலும் முதலமைச்சராக வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன், என்று கூறினார்.

மாநாட்டிற்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமை வகித்தார் , தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் நட்டர்ஜி முன்னிலை வகித்தார் ,மாநாட்டு தொடக்கத்தில் விளக்கவுரையை கூடுதல் இயக்குனர் (ஊரக தொழில்கள் )ஜெகதீஷ் ஆற்றினார் ,மற்றும் தூத்துக்குடி நெல்லை ஆவின் தலைவர் என். சின்னதுரை ,மீனவ கூட்டுறவு இணைத்த தலைவர் சேவியர் ,உட்பட பலர் கலந்துகொண்டனர்.

செய்தி :- அஹமது, தூத்துக்குடி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..