வேலூரில் தமிழ் எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் முப்பெரும் விழா…

வேலூரில் எழுத்தாளர்கள் சங்கம் சார்பாக முப்பெரும் விழா நடைபெற்றது.  வேலூர் கேரள சமாஜ்யில் நடந்த நிகழ்ச்சிக்கு கவிஞர் பெர்னாட்ஷா மற்றும் பாரிதாசன் வரவேற்புரை வழங்கினர். அதை தொடர்ந்து  கவிஞர் இலக்குமிபதி வாழ்த்துரை வழங்கினார்.  இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் சாய் சுப்ரபாதம் ஓட்டல் மேலாண்மை இயக்குநர் மேத்தாகிரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.

அதை தொடர்ந்து  எழுத்தாளர் சங்க பொருளாளர் வேலூர் ராதாகிருஷ்ணனின் வாழ்த்துரை படிக்கப்பட்டது. இந்நிகழ்வின் ஒரு பகுதியாக பள்ளி மாணவிகளின் பரதநாட்டிய நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.  நிகழ்வின் இறுதியில் கவிஞர் சுரேஷ் பாபு நன்றி கூறினார்.

வேலூரிலிருந்து கே.எம்.வாரியார்