Home கட்டுரைகள் அறிவோம் புதிய டிஜிட்டல் ATM கார்டுகளை எப்படி உபயோகிக்க தொடங்குவது….

அறிவோம் புதிய டிஜிட்டல் ATM கார்டுகளை எப்படி உபயோகிக்க தொடங்குவது….

by ஆசிரியர்

புதிய டிஜிட்டல் ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு ( ACTIVATE ) கொண்டு வருவது???.

இப்போது அனைத்து வங்கிகளும் சிப் பொருத்தப்பட்ட ATM கார்டுகளை வழங்கி வருகின்றன புதிய ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது எனப்பார்ப்போம்

1.முதலில் ATM இயந்திரத்தில் உங்கள் புதிய ATM கார்டை எப்போதும் போல insert செய்யவும். PIN GENERATE என வரும் அதை தேர்வு செய்யவும்.

2.ACCOUNT NUMBER கேட்கும் அதை பதிவு செய்யவும்.

3. PHONE NUMBER கேட்கும் (ஏற்கனவே நீங்கள் வங்கிக்கணக்கில் பதிவு செய்த PHONE NUMBER) அதை பதிவு செய்யவும். பின்பு CONFIRM என்ற பட்டனை அழுத்தவும்.

4. உங்கள் போனுக்கு ஒரு OTP NUMBER வரும்.

5. மீன்டும் ATM CARD ஐ மெஷினில் insert செய்யவும். வழக்கம் போல் ENGLISH அல்லது தமிழ் மொழி தேர்வு செய்யவும். பிறகு PIN CHANGE OPTION ஐ தேர்வு செய்யவும். பின்பு உங்கள் மொபைலுக்கு வந்த 4 digit OTP எண்ணை ஒரு முறை மட்டும் பதிவு செய்யவும்.

6. மீண்டும் PIN NUMBER கேட்கும் அப்போது நீங்கள் உங்களுக்கு தேவையான நீங்கள் மட்டும் ரகசியமாக வைத்திருக்கக் கூடிய PIN NUMBER ஐ பதிவு செய்யவும்.

7. RE ENTER PIN NUMBER என கேட்கும் மீண்டும் புதிய PIN NUMBER ஐ பதிவு செய்யவும்.

8. இப்போது உங்கள் புதிய ATM CARD உபயோகத்திற்கு வந்து விடும்.

குறிப்பு: உங்கள் புதிய கார்டை ATM ல் insert செய்தவுடன் அதன் full process முடியாத போதும் பழைய கார்டு செயலிழந்து விடும். அதன் பிறகு புதிய கார்டை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும். மறக்காமல் A/C NUMBER ஐ மற்றும் பதிவு செய்த MOBILEPHONE ஐ உடன் கொண்டு செல்லவும்.

9. மேற்கூறிய தகவல்கள் வாயிலாக தங்களது புதிய ATM CARD ஐ ACTIVATE செய்வதில் சிரமம் இருந்தால், தங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களோ அந்த வங்கியின் கிளையுடன் சேர்ந்து இருக்கும் ATM இயந்திரத்தில் முயற்சிக்கலாம். ஏன் என்றால் உங்கள் புதிய டிஜிட்டல் ATM CARD ஐ ACTIVATE செய்வதில் சிரமம் இருந்தால் உடனடியாக உங்களது வங்கியின் அலுவலரை தொடர்பு கொண்டு உங்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்தை சரி செய்து கொள்ள முடியும்.

கட்டுரை தொகுப்பு:-  அ.சா.அலாவுதீன். மூத்த நிருபர்,கீழை நியூஸ்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!