பாலம் கட்டுவதற்கு தோண்டி வைத்திருந்த பள்ளத்தில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர் விழுந்து பலி…

திண்டுக்கல் நந்தனா பட்டி அருகே உள்ள treasury காலனியில் பாலம் கட்டும் பனிக்காக சாலையின் குறுக்கே பள்ளம் தோண்டி வைக்கப் பட்டுள்ளது. இதை வாகன ஓட்டிகளுக்கும், நடந்து செல்பவர்களுக்கும் தெரியப்படுத்தும் வகையில் பதாகைகள் எதுவும் வைக்கப்படாத நிலையில், அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற மெக்கானிக் சங்கர் (42) தவறி விழுந்து சம்பவ இடத்தில் பலியானார்.

இது சம்மந்தமாக அப்பகுதி மக்கள் கூறுகையில் இந்த உயிரிழப்பிற்கு காரணம் பள்ளம் இருப்பதை தெரியப்படுத்தும் வகையில் தடுப்போ, பதாகைகளோ வைக்கப்படாததின் விலைவுதான் என்று புகார் தெரிவித்துள்ளனர்.

செய்தி :பக்ருதீன், திண்டுக்கல்