அமைச்சர் கடம்பூர் செ.ராஜு தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் – திமுக எம்எல்ஏ கீதா ஜீவன் …

தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரத்தில் வடக்கு மாவட்ட திமுக ஊராட்சி கழக செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திமுக வடக்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான கீதாஜீவன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில் மத்திய மாநில அரசுகள் மக்களுக்கான எந்த திட்டத்தையும் நிறைவேற்றுவது கிடையாது, முதல்வர் பதவியில் எப்படியிருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிச்சாமி நினைப்பதால் பிரதமர் மோடிக்கு தலையாட்டி வருகிறார், எந்த நல்லத்திட்டங்களும் வரவில்லை நமது உரிமை பறிபோகிறது. நீட் தேர்வு மேகதாது அணை பிரச்சினை என பல்வேறு பிரச்சனைகளில் நமது உரிமையை விட்டுக் கொடுத்துள்ளனர். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏதும் செய்து கொடுக்கவில்லை, கடந்த 7 ஆண்டு அதிமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி சுமார் 20 ஆண்டுகள் பின்னோக்கிச் சென்றுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டும் என்பது மக்களின் கோரிக்கை அவர்களின் உணர்வுகளை அரசு மதிக்கவில்லை, ஆலையை மூடுவது றைவாக கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். ஆனால் அதனை அரசு கண்டுகொள்ளவில்லை, ஸ்டெர்லைட் போராட்டத்தின்போது சுட்டுக் கொல்லப்பட்டவர்களின்13பேரின் பிரேத பரிசோதனை அறிக்கை வந்துள்ளது. இதில் 12 பேருக்கு தலை மார்பு கழுத்து பகுதியில் நேரடியாக துப்பாக்கிச் சூட்டில் மரணமடைந்துள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கை தெரிவித்துள்ளது. இதிலிருந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அரசு மக்களை ஒடுக்க,  வேண்டும், பயமுறுத்த வேண்டும், ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக துப்பாக்கி சூடு நடத்தினார் கண்கூடாக வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தமிழக அமைச்சரவை அல்லது சட்டமன்றத்தை கூட்டி கொள்கை முடிவு எடுக்க வேண்டும் என்று திமுக தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என்று தொடர்ந்து தலைவரிடம் வலியுறுத்தி வருகிறோம், அவர் அறிவிக்க வேட்பாளர் வெற்றி வைக்க நாங்கள் தயாராக இருக்கிறோம், தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வெற்றி பெறும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு இடைத் தேர்தல் வந்தாலும், திமுக மாபெரும் வெற்றி பெறும்.
ஜனநாயகத்தின் நான்கு தூண் செய்தித்துறை, இதனை ஒடுக்க வேண்டும் நினைப்பது, ஜனநாயகத்தைக் கேலிக் கூத்தாக்கும் நிலைமை, தூத்துக்குடியில் ஆர்ப்பாட்டம் பொதுக்கூட்டம் எதுவாக இருந்தாலும், அதற்கு அனுமதி கொடுக்காமல் பேச்சுரிமை மறுக்கப்படுகிறது. ஜால்ரா செய்திகளை மட்டும் போட வேண்டும், எதிர்ப்பு செய்திகளை போடக் கூடாது என்று சொல்வதற்கு என்ன அர்த்தம். அதனைக் கூறுவது செய்தித்துறை அமைச்சர் கடம்பூர்.செ.ராஜீ, அவர் எந்தத் துறைக்கு அமைச்சராக இருக்கிறார், எப்படி செயல்பட வேண்டும் என்று தெரியாமல் சொல்வது வன்மையாக கண்டிக்கத்தக்கது, நடக்கின்ற பிரச்சனைகளை செய்தித்துறை தான் சொல்லவேண்டும் மக்களுக்கு, அமைச்சரின் இந்த செயல் ஜனநாயத்தை கேலிக்குறிக்கியுள்ளது. திமுக வன்மையாக எதிர்க்கிறது, இல்லையென்றால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியது தான் என்றார்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

புனித ரமலான் வாழ்த்துக்கள்..