இராமநாதபுரத்தில் இரத்த தான முகாம்..

இராமநாதபுரம் ஜாஸ் தொழிற்பயிற்சி பள்ளி, ஈஸ்ட் கோஸ்ட் ஆப் ராம்நாடு ரோட்டரி சார்பில் ஜாஸ் தொழிற்பயிற்சி பள்ளியில் ரத்த தான முகாம் நடந்தது. இம்முகாமிற்கு ரோட்டரி சங்கத் தலைவர் தினேஷ் பாபு தலைமை வகித்தார். ஜாஸ் பயிற்சி பள்ளி தாளாளர் முகமது சலாவுதீன், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சுகுமார், செங்குட்வன், கண்ணன், செல்லப்பா, ஜெயகுமார் முன்னிலை வகித்தார். பயிற்சி பள்ளி விஜயகுமாரி வரவேற்றார்.

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை ரத்த வங்கி டாக்டர் பத்துல் ராணி தலைமையில் மருத்துவ குழுவினர் 35 மாணவ, மாணவரிடம் ரத்தம் சேகரித்தனர். ரத்த தான முகாம் ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் அய்யப்பன் ஏற்பாடு செய்தார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்