Home செய்திகள் பாலக்கோடு பகுதியில் 10ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கு வறட்சியால் மகசூல் பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை…

பாலக்கோடு பகுதியில் 10ஆயிரம் ஏக்கரில் சாகுபடி செய்துள்ள மரவள்ளி கிழங்கு வறட்சியால் மகசூல் பாதிப்பு இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை…

by ஆசிரியர்

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் வருடதோரும் மரவள்ளிகிழங்கு சாகுபடியில் விவசாயிகள் ஈடுப்பட்டு வருகின்றனர். மானவாரியாக மரவள்ளிகிழங்கு சாகுபடி செய்வதால் பருவமழையை நம்பியை இப்பகுதி விவசாயிகள் உள்ளனர்.

பாலக்கோடு, சோமனஅள்ளி. அலகம்பட்டி, குத்தலஅள்ளி, காட்டம்பட்டி,பேகராஅள்ளி,புலிகரை, நக்கல்பட்டி போன்ற பகுதியில் அதிக அளவில் மரவள்ளி கிழங்கு விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் நடப்பாண்டில் தென்மேற்க்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை பொய்து போனதால் முற்றிலும் விவசாய பயிர்கள் கருகும் நிலையிலலும், மகசூல் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பருவமழையால் நல்ல செழித்த மரவள்ளிகிழங்கு ஏக்கர் ஒன்றிக்கு சுமார் 10டன் வரை மகசூல் அடைந்த நிலையில் தற்போது கடும் வறட்சி நிலவி வருவதால் மகசூல் பாதிக்கபட்டு ஏக்கர் ஒன்றிக்கு 3டன் முதல் 5டன் வரை மட்டுமே கிடைப்பதாகவும், ஆட்கள் கூலி, கிழங்கு குச்சி நடவு, உரம், களை எடுத்த செலவு என ஏக்கர் ஒன்றிக்கு 20ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்யப்படுவதாகவும் தற்போது மரவள்ளிகிழங்கு டன் 3ஆயிரத்திலிருந்து 3500வரை விற்பனை செய்வதால் பெரும் நஷ்டம் அடைவதாக விவசாயிகள் கவலை அடைந்து உள்ளனர். எனவே தருமபுரி மாவட்டத்தை வறட்சி பாதித்த மாவட்டமாக அறிவித்து போர்கால அடிப்படையில் மரவள்ளி கிழங்கு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு தமிழக அரசு வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செய்தி:- சிங்காரவேலு, பாலக்கோடு

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!