இராமநாதபுரத்தில் வாஜ்பாய் பிறந்த நாள்..

முன்னாள் பிரதமர் மறைந்த வாஜ்பாய் 94 பிறந்தநாளை ஒட்டி ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம் பா.ஜ., சார்பில் உச்சிப்புளி, வேதாளை, தங்கச்சிமடம் கிளைகளில் கொடியேற்று விழா நடந்தது. இனிப்பு வழங்கப்பட்டது. மண்டபம் ஒன்றிய தலைவர் து.பாலகிருஷ்ணன் தலைமை வைத்தார். மாவட்ட தலைவர் முரளிதரன் கொடியேற்றினார். மாவட்ட துணை தலைவர் சந்திரசேகரன், மாவட்ட செயலாளர் ராமாமிர்தம் , பிரசார அணி மாவட்ட தலைவர் தவமணி, வர்த்தகப்பிரிவு மாவட்ட செயலாளர் செல்வம், ஒன்றிய துணைத்தலைவர் சக்தி நாதன், தொழிற்பிரிவு மணிகண்டன், பிரசார அணி முனியசாமி, சக்தி சுமதி வர்த்தகப்பிரிவு ஒன்றிய தலைவர் பூவேந்திரன், ஒன்றிய செயலாளர் கோபி வேதாளை பால்ராஜ், சீதாலட்சுமி, வெள்ளைச்சாமி, தங்கச்சிமடம் கேசவன், நாகேந்திரன், கபிலன், பிரவீன் உள்பட பலர் பங்கேற்றனர். உச்சிப்புளி பிரபு, வேதாளை நம்பிராஜன், தங்கச்சிமடம் குமார் ஆகியோர் நன்றி கூறினார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

சத்திய பாதை மாத இதழ் ..

சத்திய பாதை மாத இதழ் ..

சத்தியம் வந்தது… அசத்தியம் அழிந்தது..