உத்தமபாளையம் பகுதியில் விபத்தைக் குறைக்க நடவடிக்கை எடுக்க திமுக கட்சி மனு..

தேனி மாவட்டத்திலே உத்தமபாளையம் காவல் நிலைய எல்லைக்குள் வருடத்திற்கு 16 பேர் உயிரிழப்பு ஏற்படுவதாக பதிவாகியுள்ளது, தாலுகாவின் தலைமையிடம் என்பதால் அரசு சார்ந்த அனைத்துப் பணிகளான, சார் ஆட்சியர் அலுவலகம், வட்டாரமோட்டார் போக்குவரத்து அலுவலகம், அரசு பொது மருத்துவமனை, கலைக் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி பள்ளி, கால்நடை அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், உட்பட பெரும்பாலான அலுவலகங்களுக்கு தினம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பைபாஸ் வழியாக வந்து செல்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் கிராமங்களிலிருந்து வருவதால் இரண்டு சக்கர வாகனங்களில் வருகின்றனர், பைபாஸில் போக்குவரத்து குறித்து முறையான அறிவிப்போ, மாற்றுப்பாதை பற்றியோ யாருக்கும் தெரியப்படுத்தவில்லை.

மேலும் சபரிமலை அய்யப்பன் கோவில் சீசன் என்பதால் வெளி மாநில வாகனங்களும் அதிகமாகவும், அதிவிரைவாகவும் வருகின்றனர், பைபாஸில் எந்தத் திசையில் தேனிக்குச் செல்ல வேண்டும் என்பது தெரியாமல் சாலை ஓரத்தில் நிற்பவர்கள் மீதும் மோதி உயிரிழப்பும் ஏற்பட்டு விடுகிறது, எனவே பைபாஸில் விபத்தில்லாத போக்குவரத்தை ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் போக்குவரத்து காவலர்கள் நியமிக்க வேண்டும், பைபாஸில் போக்குவரத்து பற்றிய விழிப்புணர்வு வழங்க அலுவலகம் திறக்க வேண்டும், ரவுண்டானா அமைக்க வேண்டும், என உத்தமபாளையம் பேரூர் திமுக கட்சியின் செயலாளர், அ.சுல்தான் இப்ராகிம் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

செய்தி:- பால்பாண்டி, தேனி

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

மே மாத இதழ்..

மே மாத இதழ்..

To Download Keelainews Android Application – Click on the Image