மின் தூக்கி முறையில் புதிய பாம்பன் பாலம்: வைரலாகும் வீடியோ காட்சி..

இராமேஸ்வரம் செல்லும் முன் மண்டபம் – பாம்பன் இடையேயான பாம்பன் ரயில் பாலம் இந்திய அடையாளங்களில் ஒன்று. சரக்கு கப்பல் வரும்போது பாலம் தூக்கப்படும் காட்சியை காண சுற்றுலா பயணிகள் குவிகின்றனர்.. கடந்த 1911ஆம் ஆண்டு தொடங்கி 1915ஆம் ஆண்டு திறக்கப்பட்ட இந்த பாலம் நூற்றாண்டை கடந்துள்ளது.

இந்நிலையில் இப்பாலத்தில் நவ.4 ல் பழுது ஏற்பட்டதால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. நூற்றாண்டை கடந்து விட்ட இப் பாலத்திற்கு மாற்றாக, ரூ.250 கோடி செலவில் புதிய பாலம் கட்டப்படும் என மத்திய அரசு சமீபத்தில் அறிவித்துள்ளது. இங்கு அமையவுள்ள புதிய பாலம் லிப்ட் டெக்னாலஜியில் கட்டப்படவுள்ளது.

கப்பல்கள் வரும்போது பாலத்தின் ஒரு குறிப்பிட்ட பகுதி மட்டும் லிப்ட் போல் தூக்கப்படும். கப்பல் சென்ற பிறகு மீண்டும் கீழே இறக்கப்பட்டு ரயில் பாதையாக பயன்படுத்தப்படும். இப்புதிய பாலத்தின் மாதிரி வீடியோவை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணைய தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

செய்தி:- முருகன், இராமநாதபுரம்

To Download Keelainews Android Application – Click on the Image

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியபாதை மாத இதழ்..

சத்தியம் வந்தது.. அசத்தியம் அழிந்தது..