Home செய்திகள் தூத்துக்குடி: வல்லநாடு அருகே நள்ளிரவில் இரட்டை கொலை – பதற்றம்..

தூத்துக்குடி: வல்லநாடு அருகே நள்ளிரவில் இரட்டை கொலை – பதற்றம்..

by ஆசிரியர்
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே நள்ளிரவில் இருவரை நான்கு பேர் கொண்ட கும்பல் ஒன்று  வெட்டிக் கொலை செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாடு அருகே உள்ள பக்கபட்டி கிராமம், பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் ராமையா மகன் முத்துசாமி (65). மற்றும்  சுடலைமணி (18). இருவரும் உறவினர்கள்  நேற்று  இரவு 10.30 மணியளவில் சுடலைமணி திருநெல்வேலியில்  பணி முடிந்து பேருந்தில் தனது ஊருக்குச் வந்துள்ளார் . பேருந்து நிறுத்தத்தில் இருந்த அவருடைய தாத்தா முத்துசாமி அவரை  அழைத்து சென்றுள்ளார். அப்போது 2 பைக்குகளில் வந்த 4பேர் கொண்ட கும்பல் அவர்களை வழிமறித்து மேலும் சுடலை மணியை சராமாரியாக அரிவாளால் வெட்டியது. இதனை தடுக்க முயன்ற அவரது  தாத்தா முத்துசாமியையும் அந்த கும்பல் வெட்டியது. இதில் இருவரும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடிவிட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்து முறப்பநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்திற்கு மாவட்ட எஸ்பி முரளி ரம்பா நேரில் சென்று விசாரணை நடத்தினார். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கடந்த மே மாதம் தாமிரபரணி ஆற்றில்  பக்கபட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரமுத்து மகன் வடிவேல் முருகன்.மற்றும்  கொலையான சுடலைமணியும்  குளித்துக் கொண்டிருந்தபோது, அதே கிராமத்தைச் சேர்ந்த சுப்பையா மகன் சின்னதம்பி (30) அதே ஆற்றில் குளிக்க வந்துள்ளார் . அபபோது. வடிவேல் முருகன் எங்கள் பகுதி ஆற்றில் எப்படி குளிக்கலாம் என்று கூறி சின்னதம்பியுடன் தகராறு செய்து அவரை சாதிப்பெயரை கூறி திட்டி தாக்கியுள்ளார் . இதுகுறித்து சின்னதம்பி முறப்பநாடு போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வடிவேல் முருகன் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.
இந்த சம்பவத்தால்  சுடலை மணி மற்றும்  சின்னதம்பி இருவருக்கும்  இடையே பகை ஏற்பட்டுள்ளது . இந்நிலையில், நேற்று சின்னதம்பி அவரது அண்ணன் மாரிமுத்து (35), தம்பிகள் அருண்குமார் (28), உட்பட 4பேர் சேர்ந்து சுடலை மணியை வெட்டிக் கொலை செய்துள்ளனர்.  தடுக்க முயன்றதால் அவரது தாத்தாவும் பலியாகி உள்ளார். இந்த சம்பவத்தால் அந்த கிராமத்தில் மீண்டும் ஜாதிக் கலவரம் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது ,தொடர்ந்து  பதற்றம் நிலவுவதால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளி ரம்பா உத்தரவின் பேரில் போலீசார் பாதுகாப்புக்காக அதிக அளவில்  குவிக்கப்பட்டுள்ளனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!